துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கருடன் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையைத் தாண்டி தமிழ்நாட்டின் கிராமப்புற மக்கள் குடும்பத்துடன் சூரி நடித்துள்ள கருடன் படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு குவிந்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு சூரி படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு காட்டி வருவது தமிழ் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தையை பெத்த பின்பும் அழகு குறையலையே!.. சோப்பு நுரையை ஆடையாக அணிந்து போஸ் கொடுத்த பிரபல நடிகை!..
கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக கவின் வருவார் என எதிர்பார்த்த நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக சூரி ஜாக்பாட் அடித்துள்ளார். சூரிக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது என்றும் சுக்கிர திசைதான் போங்க என சினிமா பிரபலங்கள் பலரும் பொறாமைப்படும் அளவுக்கு கருடன் படத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த ஆண்டு மொக்கையான படங்களை எடுத்து வைத்துவிட்டு ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தால் படங்கள் ஓடுவதில்லை என்றும் ஓடிடி வந்த பின்னர் மக்கள் படங்களை பார்க்க தியேட்டர்களுக்கு வருவதில்லை என சப்பை கட்டு கட்டிக் கொண்டிருந்த நடிகர்களுக்கு மத்தியில் சூரி நடிப்பின் நாயகனாக மாறி நல்ல கதைகளையும் நல்ல படங்களையும் கொடுத்தால் நிச்சயம் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்பதை நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவை கார்த்திக் சுப்புராஜ் எப்படி மாத்திட்டாரு பாருங்க!.. சூர்யா 44 ஃபர்ஸ்ட் ஷாட் வீடியோ ரிலீஸ்!
ரசிகர்களை என்டர்டெயின் படங்கள் இருந்தால் நிச்சயம் அந்த படங்கள் செய்யும் விதமாக வெற்றி பெறத்தான் செய்கிறது. இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியான மலையாள படங்கள் அனைத்தும் அந்த பாணியிலேயே வெளியாகி 100 கோடி வசூலை கடந்தன. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படமும் கடைசிவரை ரசிகர்களை போரடிக்காமல் வைத்துக் கொண்டதுதான் அந்த படம் 100 கோடி வசூலை ஈட்ட காரணம் என்கின்றனர்.
அதேபோல தற்போது சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் முதல் பாதியில் சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பு ஹைலைட்டாக தெரிய இடைவேளைக்கு பிறகு சூரியின் நடிப்பு தூள் கிளப்ப படத்தை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர்.
இதையும் படிங்க: சத்யராஜோட லொள்ளு தாங்க முடியலைடா சாமி… கவுண்டமணி, மணிவண்ணன் கூட அப்படியா நடிச்சாரு?
சூரி நடித்த கருடன் திரைப்படம் முதல் நாளில் 4.45 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாள் வசூல் 6 கோடியாக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமையுடன் நேற்று சுமார் 8 கோடி ரூபாய் வசூலை கருடன் திரைப்படம் பெற்றிருப்பதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக 18 கோடியளவுக்கு 3 நாட்களில் படத்தின் வசூல் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…