விடுதலை படத்தோட மிரட்டலா இருக்கு!.. சூரியின் கருடன் படத்துக்கு பிரஸ் ஷோவில் கிடைத்த விமர்சனம்!..

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் நாளை வெளியாகிறது. அந்த படத்தில் பத்திரிகையாளர் காட்சி இன்று மாலை திரையிடப்பட்டது. அந்த காட்சியை பார்த்த பல பத்திரிகையாளர்களும் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவதாக வெளியாக உள்ள கருடன் படமும் சூரிக்கு வெற்றி படமாக மாறும் என தெரிகிறது.

இதையும் படிங்க: வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது..! சாதித்துக் காட்டிய ஏவிஎம் படம்…

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் சமீபத்தில் படுதோல்வியை சந்தித்தது. சூரி நடித்துள்ள கருடன் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்துள்ளார். ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்துமே நன்றாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் பாராட்டியுள்ளனர்.

நடிகர் சூரி தொடர்ந்து ஹீரோவாக நடிப்பாரா என்ற கேள்வியை சூரியிடம் வைத்தபோது கதை நாயகனாக நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் நீங்கள் பார்க்க ரெடி என்றால் நான் நடிக்க ரெடி என அதிரடியாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: என்னை கேட்டா யூஸ் பண்ணாங்க!.. பாட்டும் அப்படித்தான்!.. மீண்டும் இளையராஜாவை சீண்டும் வைரமுத்து!..

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் கதையை சூரியின் கதைதான் என்றும் வெற்றிமாறனும் இந்த படத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என துரை செந்தில்குமார் சமீபத்திய பேட்டியில் கூறினார். ஆரம்பத்தில் வெற்றிமாறன் கதைதான் கருடன் என சொல்லப்பட்டது. மேலும் விஜய்க்கு வெற்றிமாறன் எழுதிய படத்தின் கதை இது என்று கூறினர். ஆனால், சொக்கன் கதாபாத்திரம் சூரிதான் சொன்னார் வெற்றிமாறன் விஜய்க்காக உருவாக்கிய கதை வேறு கதை என துரை செந்தில்குமார் சமீபத்தில் விளக்கம் கொடுத்திருந்தார்.

சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் தமிழ் சினிமாவின் அடுத்த வெற்றி படமாக மாறுமா? ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தியேட்டருக்கு சென்று பார்ப்பார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடியா?!.. மொத்த பட்ஜெட்டும் வந்துடுச்சே!.. கோலிவுட் கத்துக்கணும்!..

 

Related Articles

Next Story