பண மழையில் புரள நினைக்கும் சூரி, கவின்! கோடிதான் வேணுனு நினைச்சா இத பண்ணுங்க.. கேட்டு பொழைச்சுக்கோங்க

Soori Kavin: சமீபகாலமாக மாஸ் ஹீரோக்களை விட சின்ன பட்ஜெட் படங்களில் ஹீரோக்கள் அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை கடுப்படைய வைக்கின்றனர். ஏனெனில் சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் அந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்களாகவே மாறியிருக்கின்றன.

அதன் அடிப்படையில்தான் அதில் நடிக்கும் ஹீரோக்கள் எங்களுக்கு இவ்வளவு கோடி வேண்டும். அவ்வளவு வேண்டும் என குடைச்சல் கொடுத்து வருகின்றனர். உதாரணமாக மணிகண்டன் தொடர்ந்து மூன்று படங்கள் ஹிட் கொடுத்த நிலையில் எனக்கு இரண்டு கோடி சம்பளம் வேண்டும் என ஒற்றக்காலில் நிற்கின்றார்.

இதையும் படிங்க: அஜித் விஜய் பட கலெக்‌ஷனை ஓவர்டேக் செய்த இரண்டே திரைப்படங்கள்! லிஸ்ட்ல ரஜினியை காணோம்

அதை போல கவின் இரண்டு படங்கள்தான் ஹிட் கொடுத்தார். அவரும் எனக்கு 1.50 கோடி கொடுத்தால்தான் நடிப்பேன் என கூறி வருகிறார். இவர்கள் லிஸ்ட்டில் இப்போது சூரியும் சேர்ந்திருக்கிறார். அவராக கேட்ட மாதிரி தெரியவில்லை.

இருந்தாலும் விடுதலை பட வெற்றிக்கு பிறகு சூரியின் சம்பளம் 8 கோடி என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. இப்படி நடிகர்கள் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போனால் தியேட்டர் உரிமையாளர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் சைடில் டிக்கெட் விலையை ஏற்றத்தான் செய்வார்கள். இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர் திருச்சி ஸ்ரீதர் இதை பற்றி ஒரு விளக்கமான பதிலை அளித்தார்.

இதையும் படிங்க: 500 ரூபாய் வாங்கி கொண்டு நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!.. அவரையே கோபப்பட வச்ச தயாரிப்பாளர்!..

அதாவது இவர்கள் சம்பளமாக கோடிக்கணக்கில் வாங்குவதை விட லாபத்தில் பங்கு கேட்கலாமே. படத்தில் நடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு பின் அந்தப் படம் அடைகிற பிசினஸை வைத்து படம் எவ்வளவு தேறும் தேறாது என தெரிந்துவிடும். அதன் பிறகு வருகிற லாபத்தில் ஒரு குறிப்பட்ட சதவீதத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும்.

ஒரு படம் முடிந்ததும் கிட்டத்தட்ட ஓடிடி, ஹிந்தி ரைட்ஸ் என 10 தளத்தில் வியாபாரம் நடந்துமுடிந்துவிடுகிறது. இதை வைத்து வரும் லாபத்தில் அவர்கள் ஈசியாக ஒரு குறிப்பிட்ட தொகையை அள்ள முடியும் என திருச்சி ஸ்ரீதர் கூறினார்.இதைவிட்டு உங்களுக்கு முன்பே பெரும் தொகையை சம்பளமாக கொடுத்துவிட்டு படம் முடியும் வரை படத்தின் தயாரிப்பாளர் மாதக்கணக்கில் வட்டிக் கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: ஒரு தமிழனா இருந்துட்டு விஜய் இத பண்ணக் கூடாது..அந்த வகையில் அஜித் நல்லவருப்பா! அரசியலுக்கான ஆப்பா?

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it