Actor Soori: ஒரு சாதாரண துணை நகைச்சுவை நடிகராக வந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களின் மூலம் முதன்மை நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சூரி.
மதுரையை பூர்வீகமாக கொண்ட சூரி அந்த ஊர் வழக்குப் பேச்சையே சினிமாவிலும் பயன்படுத்தி வந்தார். இதுவே மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அசால்ட்டாக கவுண்டர்களை அடித்து அனைவரையும் சிரிக்க வைப்பார் நடிகர் சூரி.
இதையும் படிங்க: வேற எதாச்சும் மாத்துங்கப்பா… செம மொக்கையா போகுது… காத்திருக்கும் சிறகடிக்க ஆசை ரசிகர்கள்…
சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா, கார்த்தி, விக்ரம், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக ஜொலித்தார். ஆனால் அவர் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமில்லை. அவருக்குள்ளும் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை இயக்குனர் வெற்றிமாறன் உணர்ந்தார்.
அதன் விளைவுதான் விடுதலை திரைப்படம். அந்த படத்தில் சூரியின் நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்தது. அதனை தொடர்ந்து இப்போது சூரி ஹீரோவாக மாறியிருக்கிறார். கருடன் , கொட்டுக்காளி போன்ற படங்களில் சூரிதான் ஹீரோ.
இதையும் படிங்க: அஜித் கல்யாணத்தில் அனைவரும் பாராட்டிய ஒரு விஷயம்! எல்லாத்துக்கும் இவர்தான் காரணமா?
அதில் கருடன் திரைப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமாரும் நடித்திருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கருடன் திரைப்படத்தில் சூரியின் சம்பளம் 8 கோடியாம். ஆனால் சசிகுமாருக்கு வெறும் 2 கோடிதான் சம்பளமாம்.
தாரத்தப்பட்டை படத்திற்கு முன்புவரை சசிகுமாரின் மார்கெட் நன்றாக இருந்தது என்றும் அந்தப் படத்தில் பாலாவால் மிகவும் கடனாளியாக மாறினார் சசிகுமார் என்றும் அதிலிருந்தே சசிகுமாரால் மீள முடியவில்லை என்றும் சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க:கோபி ஒரு அழுகையை போட்டு எல்லாரையும் கப்சிப்னு ஆக்கிட்டீங்களே… வெவரம் தான்
அங்கு பட்ட அடிதான் இப்போது கருடன் படத்தில் எந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது பாருங்கள் என செய்யாறு பாலு கூறினார். ஒரு காலத்தில் சூரி காமெடி நடிகராக சசிகுமார் ஹீரோவாக ஒரே படத்தில் சேர்ந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…