Connect with us

Cinema News

கோபி ஒரு அழுகையை போட்டு எல்லாரையும் கப்சிப்னு ஆக்கிட்டீங்களே… வெவரம் தான்

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியை தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு மேனேஜராக வரும்படி கேட்கிறார் பாக்யா. ஆனால் கோபி அவ்வளவு கீழ இறங்கி நான் போய்விடவில்லை. என்னை பார்த்து எப்படி நீ அப்படி கேட்கலாம் என திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

அருகில் நின்றுக்கொண்டு இருக்கும் ராதிகா உங்களுக்கு திமிர் அதிகமாகிவிட்டது. இந்த நேரத்தில் இப்படி குத்தி காமிக்க வேண்டுமா? அவரைப் பார்த்துக்க மனைவி நான் இருக்கிறேன். வீட்டு செலவுக்கு காசு கொடுக்க மாட்டோம் என கவலைப்பட வேண்டாம் எனவும் பாக்யாவை திட்டுகிறார். அதற்கு பாக்யா நான் அவரிடம் காசு வாங்கவில்லையே என கேட்க எங்க செலவு உண்டான காசை இனி நானே தந்து விடுவேன். 

இதையும் படிங்க: ரீரிலிஸ் பரிதாபங்கள்!.. சினிமா தியேட்டர இப்படி K Tv மாதிரி ஆக்கி விட்டுடீங்களேயா!.. ரசிகர்கள் கலாய்!

உங்க இரக்கம் எங்களுக்கு தேவையில்லை என திட்டிவிட்டு அவரும் சென்று விடுகிறார். ரூமில் அமர்ந்து பாக்யா பேசியதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார் கோபி. அப்போ வரும் ராதிகா பாக்யாவிடம் அசிங்கப்பட்டு விடக்கூடாது என நினைத்திருந்தேன். ஆனால் இன்று அதுவும் நடந்து விட்டது. கிரெடிட் கார்ட் பிரச்சினை வந்தபோதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம். அப்போதும் சொல்லவில்லை. ஆபீஸில் பிரச்சனை ஆரம்பிக்கும்போதாவது சொல்லி இருக்கலாம். அப்போதும் சொல்லவில்லை.

ஆபிஸை மூடிய அன்றாவது சொல்லி இருக்கலாம். எதுவுமே என்னிடம் நீங்கள் சொல்லவில்லை. ஆபீஸ் மூடிய விஷயம் எனக்கே கஷ்டமாக இருந்தது. அதை உன்னிடம் சொல்லி நீங்களையும் வருத்தப்பட வேண்டாம் என்று தான் சொல்லவில்லை. சீக்கிரம் இன்னொரு பிசினஸ் தொடங்கி கண்டிப்பாக உன்னை பழைய படி வைத்துக் கொள்வேன் என்கிறார் கோபி.

ராதிகா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு உங்களுக்கு தான் என் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறுகிறார்.  பின்னர் ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கோபியை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க ராமமூர்த்தி அவரை சமாதானம் செய்கிறார். காலையில் அவர்களுக்கு பாக்யா காபி கொண்டு வந்து கொடுக்கிறார்.

இதையும் படிங்க: மாமனார் பட நடிகையை ஜோடியாக்கிய தனுஷ்!.. ராயன் படத்துல இவர்தான் ஹீரோயினாம்!..

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் படத்துக்கு வெளிநாட்டில் என்னவொரு மவுசு!.. அட அந்த ஹீரோ பெயரை எல்லாம் சொல்றாங்களே!..

google news
Continue Reading

More in Cinema News

To Top