சிவகார்த்திகேயன் படத்துக்கு வெளிநாட்டில் என்னவொரு மவுசு!.. அட அந்த ஹீரோ பெயரை எல்லாம் சொல்றாங்களே!..

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் வெளியான கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ் வினோத் ராஜ் தனது படத்தை பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி பாராட்டுக்களை பெற்றார்.

இந்நிலையில் அடுத்த அவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி மற்றும் அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தை பெர்லினில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டு அங்கே ரசிகர்களின் கைதட்டல்களையும் பாராட்டுகளையும் அள்ளிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 5 ஆம்புலன்ஸ் கொடுத்த கேபிஒய் பாலா!.. இப்போ மாற்றுத்திறனாளிக்கு என்ன உதவி செஞ்சிருக்காரு பாருங்க!

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் மொக்கை ஜோக்குகளை அடித்து வந்த சூரி இனிமேல் காமெடி நடிகனாக காலத்தை ஓட்ட முடியாது என நினைத்து அதிரடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் கதை நாயகனாக விடுதலை படத்தில் மாறினார்.

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கொட்டுக்காளி, ஏழுகடல் ஏழுமலை, கருடன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில், விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகம், ஏழு கடல் ஏழு மலை மற்றும் கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்று வருகின்றன.

இதையும் படிங்க: கண்ட இடத்துல காத்துவாங்குதே!.. பப்பரப்பான்னு காட்டும் பார்த்திபன் பட ஹீரோயின்.. யாருன்னு பாருங்க!..

வெளிநாட்டினர் வரிசையில் நின்று சூரி நடித்த கொட்டுக்காளி படத்தைப் பார்த்து கைதட்டி பாராட்டி விட்டு வெளியே வந்து பேட்டி எடுக்கும் போதும் அந்தப் படத்தின் ஹீரோ சூரி சிறப்பாக நடித்துள்ளார். எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என ஃபாரின் ரசிகைகளும் பேசுவதை பார்க்கும்போதே சந்தோசமாக இருக்கிறது.

தொடர்ந்து நடிகர் சூரி இதே போன்ற படங்களில் நடித்து பல விருதுகளை குவிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.

 

Related Articles

Next Story