சூப்பர் ஸ்டார் ரஜினி பட டைட்டில். வெற்றிமாறன் டைரக்டர். சூரி முக்கிய வேடம். விஜய்சேதுபதி ஹீரோ. எல்லாத்துக்கும் மேலா இது இளையராஜா இசையில் வெளியான படம். அப்படின்னா படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறத்தானே செய்யும்.
இந்த மாத இறுதியில் மார்ச் 31ல் விடுதலை படம் வெளியாகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் எல்.ரெட்குமார் தயாரிப்பில், வேல்ராஜின் ஒளிப்பதிவில், இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் படம் வெளியாக உள்ளது.
படத்திற்கு திரைக்கதை எழுதியவர்கள் வெற்றிமாறன் மற்றும் ஜெயமோகன். இது ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.
சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சரவண சுப்பையா, பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன், இளரவசு உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஒன்னோட நடந்தா, காட்டுமல்லி, அருட்பெருஞ்ஜோதி ஆகிய பாடல்கள் உள்ளன. ஒன்னோடு நடந்தா பாடலை தனுஷ் அனன்யாவுடன் பாடியுள்ளார். இளையராஜாவின் இசையில் தனுஷ் பாடிய முதல் பாடல் இதுதான். இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது யுடியூப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்படி படத்துல என்ன விசேஷம். அதைப் பார்க்குறதுக்கு முன்னாடி படத்துல ஒர்க் பண்ணியவங்க ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் என்ன சொன்னாங்கன்னு பார்க்கலாம்.
விஜய் சேதுபதி
சூரி ரொம்ப அழகா அற்புதமா பேசுனாரு சூரி. இந்த சூரியோட பேச்சு உங்களை எப்படி ஆட்கொண்டதோ அதே போல இந்தப் படம் முழுவதும் அவரோ திறமையும், நடிப்பும் வியாபித்து இருக்கும்னு நம்புறேன்.
ரொம்ப அழகான நடிகர். ரொம்ப அழகான பேச்சு. ரொம்ப சிறப்பா யாரையும் விடாம அவங்கவங்களோட தன்மையை சொன்னாரு. நான் மயங்கிட்டேன்..அவரோட பேச்சைக் கேட்டு.
நான் வடசென்னைல நடிக்கறதை மிஸ் பண்ணிட்டேன்…8 நாள் சூட்டிங் கூப்பிட்டாரு. கடம்பூர் பக்கத்துல ஒரு ஊர். வள்ளியம்மை. காக்காவே இல்லாத ஊரு. ரொம்ப ஆச்சரியமா இருந்தது.
ஒரு டைரக்டர் என்னைக் கூட்டிப் போய் 8 நாள் ஆடிஷன் பண்ணிருக்காருன்னா பார்த்துக்கங்க அவர் யாருன்னு? வெற்றிமாறன் சார் கூட ஒர்க் பண்ணுன அனுபவம்கறது மிக அறிவு சார்ந்தது.
சூரி
வெற்றிமாறன் படத்துல எப்படியாவது நடிச்சிறனும்னு இருந்தேன். ஏன்னு கேட்டா ஒரு நடிகனுக்கு எப்படி கிரேஸ் இருக்குமோ அந்த மாதிரி இயக்குனருக்கு இருக்குறது ரொம்ப ரேர் தான். பாலசந்தர் சார், எஸ்.ஜே.சூர்யா அப்படின்னு நிறைய பேரு இருக்காங்க.
ஆனா வெற்றிமாறன் கிட்ட அப்படி ஒரே கிரேஸ் இருந்தது. வெற்றிமாறன் படமான்னு கேக்குறாங்க. வடசென்னை படத்தைப் பார்த்ததுக்கு அப்புறம் இந்தப்படத்துல எப்படியாவது நடிக்கணுமேன்னு பார்த்தேன். நானும் அவரோட ரசிகனா தான் இருந்தேன்.
கேமராமேன் எனக்கு பழக்கம். அவர் மூலமா வெற்றிமாறன் இயக்கத்துல நடிக்கிற சான்ஸ் கிடைச்சது. அதுவும் கதையின் நாயகனே நீங்க தான்னு சொல்லும்போது எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்…தூக்கி வாரிப் போட்டது.
இளையராஜா
படம் வந்து இதுவரை திரை உலகம் சந்திக்காத ஒரு படமாக இருக்கும். அவருடைய ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதையே. கடல் அலை வந்துக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு அலையும் வெவ்வேறு அலையே. அதே போல வெற்றிமாறன் வெவ்வேறு படத்திற்கு திரைக்கதை அமைக்கிறார். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
திரை உலகத்திற்கு இவர் முக்கியமான டைரக்டர் என்பதைத் சொல்லிக்கொள்கிறேன். ஆயிரத்து ஐநூறு படம் பண்ணுனதுக்கு அப்புறமா இதை சொல்றேனா நீங்க புரிஞ்சிக்கணும். 1500 படங்களுக்கு நான் இசை அமைத்ததால் 1500 டைரக்டர்களுக்கு நான் ஒர்க் பண்ணிருக்கிறேன்கறது அர்த்தம்.
இதில் கிடைத்த அனுபவங்களை வைத்து நான் சொல்வது வெற்றிமாறன் திரை உலகத்திற்குக் கிடைத்த ஒரு நல்ல டைரக்டர். இந்தப்படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையைக் கேட்பீர்கள். வழிநெடுகக் காட்டுமல்லி என்ற பாடலை அசத்தலாகப் பாடினார் இளையராஜா.
படத்தைப் பற்றி வெற்றிமாறன் பேசுகையில், படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப வித்தியாசமா சேலஞ்சிங்கா இருக்கும். படத்தின் கதை நாயகன் சூரி. கதாநாயகன் வாத்தியார் என்ற விஜய் சேதுபதி என்றார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…