
Cinema News
‘விடுதலை’ படம் கொடுத்த மகுடம்! தக்க வைத்துக் கொள்வாரா சூரி? ஆரம்பிச்ச இடத்துக்கே கொண்டு சென்ற இயக்குனர்
Actor soori: 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்தின் மூலம் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் நடிகர் சூரி. மிகவும் எதார்த்தமான முகத்துடன் ஏதோ பக்கத்து வீட்டு நபர் போன்ற தோற்றத்தில் தான் இருந்தார். அந்தப் படத்தில் குறிப்பாக பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியால்தான் சூரி மிகவும் பிரபலமானார்.
அதிலிருந்தே பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 வருடங்களை கடந்து இன்று ஒரு மாபெரும் நடிகராக மக்கள் முன் அறியப்படுகிறார். நகைச்சுவை உணர்வு மட்டும் உன்னிடம் இல்லை. நடிப்புத் திறமையும் சேர்ந்து இருக்கிறது என்பதை வெற்றிமாறன் கண்டறிந்து விடுதலை படத்தில் ஹீரோவாக்கினார்.
இதையும் படிங்க: 39 வயசுலயும் சும்மா கின்னுன்னு இருக்கேன்!.. நீங்க என்னடா பாடி ஷேம் பண்றது.. பட்டாசா வெடித்த பிரியாமணி!
அந்தப் படத்தில் சூரி வெளிப்படுத்திய எமோஷனாகட்டும், காதல் காட்சிகளாகட்டும். இவ்ளோ நாளாக எங்கு இருந்தீர்கள் சூரி? என்று கேட்க வைத்து விட்டது. அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்திய படம்தான் விடுதலை திரைப்படம். இப்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் சூரி நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்த விடுதலை படத்தின் முதல் பாகத்தின் வெற்றி சூரியை தேடி பல இயக்குனர்களை வரவழைத்திருக்கிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இதையும் படிங்க: அட தொட்டதுக்கெல்லாம் சினுங்குவாரு போல – கமல், ஸ்ரீதேவி போஸ்டரை பார்த்து விரக்தியில் ரஜினி எடுத்த முடிவு!
மேலும் வெற்றிமாறன் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்திலும் சூரி ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதனை அடுத்து அமீர் இப்போது ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அது முடிந்ததும் சூரியை வைத்துதான் தனது அடுத்தப் படத்தை தொடங்க இருக்கிறாராம்.
இது போக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் சூரி. இதில் வேடிக்கை என்னவென்றால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் அந்தப் படத்தின் பெயர்தான் ஹைலைட். அந்த புதிய படத்திற்கு ‘பரோட்டா’ என்றே பெயரிடப்பட்டுள்ளதாம். அதற்கான அட்வான்ஸ் தொகையும் சூரி பெற்றுக் கொண்டாராம்.
இதையும் படிங்க: நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் முடிவு ஒன்னுதான்! அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு வழிவிட்ட விஜய், அஜித்