நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் முடிவு ஒன்னுதான்! அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு வழிவிட்ட விஜய், அஜித்

Actor Ajith and Vijay: கோலிவுட்டில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் இவர்களுக்கு பிறகு ஒரு அசைக்க முடியாத கூட்டணியாக மாறியிருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்குள் வந்து சரி சமமான வெற்றி தோல்விகளை பார்த்தவர்கள்.

இன்று இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக ஒரு கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் அவர்களுக்குள் எந்த வித பொறாமையும் போட்டியும் இருந்தது இல்லை. இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் மட்டும்தான் சேர்ந்து நடித்தார்கள்.

இதையும் படிங்க: நீங்க மட்டும் பாலிவுட் போலாம்… அவரு போக கூடாதா? ஜவானில் அட்லீ செய்த தில்லாலங்கடி!

அதன் பிறகு தங்கள் பாதைகளை தாங்களே தேடிக் கொண்டு வெற்றிப்பாதைகளாக மாற்றினார்கள். அதிக பாக்ஸ் ஆஃபிஸ் கொடுக்கக் கூடிய படங்களாக அஜித் , விஜய் படங்கள் தான் தமிழ் சினிமாவில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் அஜித் மகிழ் திருமேனியுடன் விடாமுயற்சி படத்தில் பிஸியாக இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறதாம். அதே வேளையில் லியோ படத்தை முடித்து விஜயும் வெங்கட் பிரபுடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்.

இதையும் படிங்க: செஞ்சி வச்ச சில போல நிக்குறியே!.. அன் லிமிட்டேட் அழகை தாரளமா காட்டும் கீர்த்தி சுரேஷ்…

அந்த படத்திற்கான வேலைகளில் தான் விஜய் இப்போது பிஸியாக இருக்கிறார். ஏற்கனவே அறிந்த தகவலின் படி தளபதி 68 படத்திற்கு பிறகு சில காலம் விஜய் சினிமாவிற்கு ஓய்வு கொடுப்பதாக கூறப்பட்டது.

அதே போல அஜித்தும் விடாமுயற்சிக்கு பிறகு சில காலம் ஓய்வெடுக்கப் போகிறார். இருவரும் தங்கள் வெவ்வேறு பயணங்களில் ஈடுபடுத்திக் கொள்ள இருக்கிறார்கள். விஜய் அரசியல் பயணத்தில் தன் கவனத்தை செலுத்த இருக்கிறார்.

இதையும் படிங்க: மீண்டும் அந்தமாதிரி படமா? மலையாள நடிகையை கோர்த்து விட்டு எஸ்கேப் ஆன கீர்த்தி சுரேஷ்

அஜித் தன்னுடைய உலக சுற்றுப் பயணத்தில் கவனத்தை செலுத்த இருக்கிறார். இதனால் சினிமாவில் ஒரு வெற்றிடம் ஏற்படும். விஜய், அஜித் இடத்தை கண்டிப்பாக அடுத்த இளம் தலைமுறை நடிகர்கள் பிடிப்பதற்கு போட்டி போடுவார்கள் என்பது தெரிகிறது. ஆனால் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த இடைவெளியை அடுத்த தலைமுறை நடிகர்கள் பயன்படுத்திக் கொள்வதுதான் சரியானது. யார் போட்டி போட்டாலும் போடவில்லை என்றாலும் தங்கள் குறிக்கோளில் அஜித்தும் விஜயும் கவனமாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 

Related Articles

Next Story