அப்பா இப்ப ஒன்னு பண்றார்!.. அது குளோபல் சென்சேஷன் ஆகும்!. ஹைப் ஏத்தும் சௌந்தர்யா!…

பெங்களூரில் பேருந்து நடத்துனராக இருந்து, சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து நடிப்புக் கல்லூரியில் படித்து, இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து, அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க துவங்கி அதன்பின் கமல் ஹீரோவாக நடிக்கும் படங்களில் அவரின் நண்பராக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் ரஜினிகாந்த்.

அதன்பின் ஒரு கட்டத்தில் அவரே ஹீரோவாக நடிக்க தொடங்கி கோலிவுட்டின் வசூல் மன்னனாக மாறினார். அவருக்கு சூப்பர்ஸ்டார் என்கிற பட்டமும் கிடைத்தது. இப்போதுவரை அந்த பட்டம் அவரிடம்தான் இருக்கிறது. ரஜினியின் எல்லா படங்களும் லாபத்தை கொடுத்தன.. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் ரஜினி நடித்தார். ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார்.

ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது.. இந்நிலையில்தான் ரஜினி தனது சுயசரிதையை எழுத திட்டமிட்டிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால், சுயசரிதை என்றால் உண்மையை அப்படியே சொல்ல வேண்டும்.. ஆனால் ரஜினி அப்படிப்பட்ட நபர் கிடையாது.. தன் வாழ்வில் நடந்த முக்கிய விஷயங்களை அப்படியே சொன்னால் பலரின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ரஜினி அந்த முடிவை கைவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அவரின் மகள் சௌந்தர்யா ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘அப்பா இப்போது அவரின் சுயசரிதை நூலை எழுதும் வேலைகளை தொடங்கிவிட்டார்.. அவரது வாழ்க்கை வரலாறு கண்டிப்பா குளோபல் சென்சேஷன்’ ஆகும் என கூறியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

24 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

1 hour ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

15 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago