சிவாவின் கையை பிடித்து அழுதேன்... சௌந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்...

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும்,குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் ரஜினி கிராமத்து ஆளாக நடித்து பட்டைய கிளப்பியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் போல் இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தனது ஹூட் ஆப்பில் இப்படம் பற்றி பேசியுள்ளார். அதில் சிவாவை அவர் மிகவும் பாராட்டியுள்ளார் ‘அண்ணாத்த படத்தில் நீங்கள் செய்துள்ள மேஜி. படத்த பார்த்துவிட்டு கண்ணீரோடு உங்க கையை பிடிச்சு நன்றி சொன்னேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தலைவருடைய வெறித்தனமான ரசிகை என்ற முறையிலும், அவரது மகள் என்ற முறையிலும் கூறுகிறேன். நீங்கள் அப்பாவுடன் மீண்டும் இணைந்து பனியாற்ற வேண்டும்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.