நடிகர் சங்க கட்டிடம் என்ன தான் ஆச்சு? தலையை சுத்தி மூக்கை தொடும் ஐடியா!...பிரபலம் சொன்ன ஷாக் தகவல்!...
Actor Association: விஷால், நாசர், கார்த்தி இணைந்து பாண்டவர் அணி என்ற பெயரில் நடிகர் சங்கத்துக்கு பதவிக்கு போட்டி போட்டனர். அவர்கள் நாங்கள் வென்றால் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும் என உறுதி அளித்திருந்தனர். இதில் விஷால் ஒரு படி மேல் ஏறி அந்த மண்டபத்தில் தான் எனக்கு திருமணம் என்றார்.
தற்போது ஐந்து வருடமும் கடந்துவிட்ட நிலையில் கட்டிட வேலை இன்னும் முடிந்தப்பாடு இல்லை. இதனால் என்ன செய்யலாம் என பெரிய தலைகள் கூடி முடிவெடுத்த போது. அவர்கள் கிடைத்த ஒரு ஐடியா தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: விஜய் படத்துலயே கேமியோவா நடிக்க வரல!.. விஜயகாந்த் மகன் படத்துல நடிப்பாரா விஷால்?..
இன்னும் சங்க கட்டிடத்தினை கட்ட பெருவாரியாக தொகை தேவைப்படுகிறதாம். ஆனால் கலை நிகழ்ச்சியில் நடத்தும் நிலையில் நடிகர்கள் யாரும் இல்லை. இதனால் முக்கிய நடிகர்களிடம் ஒரு கோடி ரூபாய் வாங்கி போகிறார்களாம். அதை வைத்து கட்ட போவது இல்லையாம். அந்த தொகையை அப்படியே ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிடுவார்களாம்.
அதில் வரும் வட்டியை வைத்து பேங்கில் கடனை வாங்கி அதற்காக இஎம்ஐயாக பயன்படுத்திக்கொள்ள போகிறார்களாம். பின்னர் கடன் முடிந்ததும் அந்த காசை நடிகர்களிடம் கொடுத்து விடுவார்களாம். இது என்னடா தலையை சுத்தி மூக்கை தொடும் கதையால இருக்கு என பலர் கிசுகிசுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோடிகளை கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்!. விஜயகாந்த் ஃபாலோ பண்ண 5 விஷயங்கள்..
இதுக்கு காரணம் என்ன கேட்ட போது எந்த ஒரு நடிகரும் நான் தான் கட்டிடம் கட்டினேனு உரிமை கொண்டாடிவிடக்கூடாது என்பதற்காக தான் இந்த ஐடியா. மேலும், இந்த விஷயத்தில் சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு ஆகியோர் ஒரு கோடி தரேன் எனக் கூறிவிட்டார்களாம். விஷால் தரேன் என்றாலும் அதை சங்கமே இதுவரை நம்ப முடியவில்லை. ரஜினியிடம் இதை கேட்ட போது அவர் அதுக்கு தரேன் இல்லை என இதுவரை சொல்லவே இல்லையாம்.
இதேப்போல, அஜித் ஏற்கனவே நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாமல் போனதால் 50 லட்சம் கொடுத்ததாக ஒரு சேதி இருக்கிறது. அதுப்போல இந்த முறை அஜித்திடம் ஒரு கோடி கேட்டனராம். ஆனால் அவரும் எந்த ஒரு பதிலையும் இதுவரை சங்க ஆட்களுக்கு சொல்லவே இல்லையாம். ஆக மொத்தத்தில் நடிகர் சங்கம் மற்றொமொரு காமெடியை தான் செய்ய இருக்கிறது என்றும் விவரமறிந்த வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: எவன்டா அடிச்சது!… ராதாரவியும், வாகை சந்திரசேகரும் விஜயகாந்துக்காக செய்த தரமான சம்பவம்!…