More
Categories: Cinema History Cinema News latest news

கதை பிடித்துப் போக சம்பளமே வாங்காமல் நடித்த நடிகை! இப்ப யாராச்சும் அப்படி இருக்கீங்களா?

Sowkar Janaki: சினிமாவை பொறுத்தவரைக்கும் நடிகைகளுக்கு திருமணம் ஆனாலே அவர்களுக்குண்டான வாய்ப்புகள் குறைந்து விடுவது வழக்கம். ஆனால் சினிமாவில் தன் 19வது வயதிலேயே திருமணம் ஆன கையோடு சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை சௌகார் ஜானகி.

முதன் முதலில் சௌகார் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார் சௌகார் ஜானகி. இவருடைய தோற்றம் , நடிப்பு இந்தப் படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின் தமிழிலும் பல வாய்ப்புகள் வந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: எனக்கு கிடைத்த மற்றொரு தாய்… பெண் குழந்தைக்கு அப்பாவான விஜய் டிவி புகழ்… இன்ஸ்டாவில் பகிர்ந்த உருக்கமான பதிவு…

ஜெமினி, ஏவிஎம் என பல முன்னணி நிறுவனங்களில் வெற்றிப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சௌகார் ஜானகி. குறிப்பாக பாக்கியலட்சுமி, படிக்காத மேதை, பாலும் பழமும் போன்ற படங்களில்  நடித்து அமோக வரவேற்பை பெற்றார்.

நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று சொல்லும் நடிகைகளுக்கு மத்தியில் எந்தவொரு கதாபாத்திரம் ஆனாலும் அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் மிக துணிச்சலோடு நடித்த நடிகை சௌகார் ஜானகி.

இதையும் படிங்க: ரசிகர்களின் காயத்துக்கு மருந்து போட தயாரான விஜய்!.. லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போ வருது தெரியுமா?..

அதுவும் ஒரு சில படங்களில் இவர் ஆங்கிலம் கலந்த தமிழில் மிகவும் ஸ்டைலாக பேசக்கூடியவர். ஆங்கிலம் தெரிந்த அந்தக் கால நடிகைகளில் குறிப்பிடத்தகுந்த நடிகையாக சௌகார் ஜானகி விளங்கினார்.

இந்த நிலையில் சௌகார் ஜானகியின் பெருந்தன்மை எப்படிப்பட்டது என்பதை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார். அதாவது ஒரு படத்தின் கதையை இயக்குனர் வந்த சௌகார் ஜானகியிடம் சொல்ல அந்தக் கதை  மிகவும் பிடித்துப் போனதாம்.

இதையும் படிங்க: சில்க் ஸ்மிதா செஞ்ச வேலையில் கடுப்பான சிவாஜி!.. இவ்வளவு நடந்திருக்கா!..

அதுமட்டுமில்லாமல் கதைக்காகவே அந்தப் படத்தில் சம்பளம் வாங்காமலேயே நடித்துக் கொடுத்தாராம் சௌகார். மேலும் அந்தப் பட ரிலீஸில் பல பணப் பிரச்சினைகள் வர தன் சொந்த செலவை போட்டு படம் ரிலீஸ் ஆவதற்கு உதவினாராம்.

பட ப்ரோமோஷனுக்கே ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் மட்டுமே வருவேன் என்று சொல்லும் இப்ப உள்ள நடிகைகளில் சௌகார் ஜானகியின் இந்த பெருந்தன்மையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.

Published by
Rohini

Recent Posts