மெடிக்கள் மிராக்கிள்!.. 5 வயசிலயே கமல் அப்படியா?!.. ஆச்சர்ய தகவலை சொன்ன பிரபல இயக்குனர்…

Published on: December 11, 2023
kiamal
---Advertisement---

4 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்க துவங்கியவர் கமல்ஹாசன். சின்ன வயதிலேயே நடிப்பின் மீது அவருக்கு அப்படி ஒரு ஆசை. மிகவும் ஆர்வமாக நடிப்பார். வாலிப பருவத்தை எட்டியதும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். அப்போதுதான் அவரை தூக்கிவிட பாலச்சந்தர் வந்தார்.

அவரின் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி, நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிகப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் அவரை நடிக்க வைத்து ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்தார். ஒருபக்கம், கமலும் புதுமையான கதைகள், கதாபாத்திரங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

இதையும் படிங்க: கமல் ஒரே நேரத்தில் இவ்ளோ படங்களை அறிவிச்சதன் பின்னணி இதுதானாம்… இப்படி கூட யோசிப்பாங்களா…?

பெரிய நடிகராக மாறியதும் பல பரிசோதனை முயற்சிகளையும் கமல் செய்தார். அப்படித்தான் நாயகன், பேசும் படம், குணா, மகாநதி, குருதிப்புனல், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட படங்கள் வெளியானது. கடந்த சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். 4 வருடங்களுக்கு பின் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றி கமலை மீண்டும் நடிகராகா மாற்றிவிட்டது.

இப்போது ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக கமல் மாறியிருக்கிறார். சினிமா மீதும், கலையின் மீதும், புதிய தொழில்நுட்பங்கள் மீதும் கமலுக்கு இருக்கும் ஆர்வம் இங்கே எந்த நடிகருக்கும் இல்லை என்றே சொல்லலாம். சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே முதலீடு செய்யும் நடிகர் இவர்.

இதையும் படிங்க: ரசிகர்கள் ரசித்த சத்தியராஜின் ஃபேமஸ் வசனம்!.. காரணமே கமல்தான்!.. அட தெரியாம போச்சே!..

கமலை வைத்து தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தவர் இவர். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய முத்துராமன் ‘களத்தூர் கண்ணம்மாவில் கமலுடன் 10 சிறுவர்கள் நடித்தார்கள். ஏவிஎம் ஸ்டுடியோவில்தான் படப்பிடிப்பு நடந்தது. ஷூட்டிங் முடிந்தவுடன் அந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருப்பார்கள்’.

kamal

ஆனால், கமல் அங்கே இருக்கமாட்டார். எங்கே இருக்கிறார் என தேடினால் அங்கே ஒரு பிரிவ்யூ தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கு படத்தை பார்த்து கொண்டிருப்பார். எங்களிடம் அந்த படத்தின் ஹீரோ எப்படி நடித்தாரோ அதுபோல அப்போதே நடித்து காட்டுவார். பின்னாளில் இவன் பெரிய நடிகராக வருவான் என நினைத்தேன். அதைப்போலவே அவர் உலக நாயகனாக மாறியிருக்கிறார்’ என முத்துராமன் கூறினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு ஹிட் அடிச்ச ‘போக்கிரி’ அந்த கமல் படம்தான்!.. எவ்ளோ நேக்கா அடிக்கிறாங்க!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.