Cinema News
எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!…
தமிழ் சினிமா இசை ரசிகர்களுக்கு எப்படி இளையராஜா மிகவும் நெருக்கமானவரோ அப்படி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் நெருக்கமானவர்தான். ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட எஸ்.பி.பி ஒரு கல்லூரியில் பாடுவதை பார்த்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவரை சினிமாவில் பாடுமாறு கூறினார்.
அதன்பின் சென்னை வந்து வாய்ப்பு தேடிய அவருக்கு எம்.ஜி.ஆர் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் பாடிய பாடல்தான் அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ பாடலாகும். அதன்பின், எம்.எஸ்.வி இசையில் பல பாடல்களை பாடினாலும் இளையராஜவின் இசையில் அவர் பாடிய பாடல்கள் எல்லாமே ரசிகர்களிடம் பிரபலமானது.
இதையும் படிங்க: சிவாஜி கேரக்டரில் எஸ்.பி.பி.யா? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே.. என்ன படம் தெரியுமா
80,90களில் ராஜாவின் இசையில் மைக் மோகன், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு என பலருக்கும் பல நூறு இனிமையான பாடல்களை எஸ்.பி.பி பாடியிருக்கிறார். இன்னமும் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் ராஜாவின் இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்களே இருக்கிறது. எஸ்.பி.பி-யின் மகன் சரணும் ‘அலைபாயுதே’ உள்ளிட்ட சில படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார்.
அதேபோல், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகள் பல்லவியும் தமிழ் சினிமாவில் சில இனிமையான பாடல்களை பாடி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்ற ‘ ஹைர ஹைர ஐரோப்பா’ பாடலை பாடியது இவர்தான். அதேபோல், காதலன் படத்தில் இடம் பெற்ற ‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்’ பாடலை பாடியதும் இவர்தான்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி மூச்சுவிடாமல் பாடியது அந்தப் பாடல் இல்லையாம்… பிரபலம் சொல்லும் புதிய தகவல்!..
அஜித் நடிப்பில் வெளிவந்த பவித்ரா படத்தில் இடம் பெற்ற ‘செவ்வானம் சின்னப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ’ பாடலை பாடியதும் பல்லவிதான். இது எல்லாமே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்கள். மேலும், இசைஞானி இளையராஜா இசையில் கார்த்திக் நடித்து வெளிவந்த முத்துக்காளை ‘ஏறெடுத்து ஏறெடுத்து பாடு படு பாடு படு’ பாடலை பாடியதும் பல்லவிதான்.
ஆனால், திருமண வாழ்க்கைக்கு பின் தன்னால் சினிமாவில் பாட நேரம் ஒதுக்க முடியவில்லை எனவும், எஸ்.பி.பி.யின் மகள் என்பதற்காக சில வாய்ப்புகள் வந்தது. ஆனால், சில காரணங்களால் நான் பாடல்களை பாடுவதற்கு மறுத்துவிட்டேன்’ என பல்லவி சொல்லி இருந்தார்.