ஒரு பாட்டால உசுற வாங்குன மிர்ச்சி சிவா!..விருதே வேண்டாம் என பதறி ஓடிய எஸ்.பி.பி!..

தமிழ் சினிமாவில் இசையில் ஒரு பக்கம் இளையராஜா என்றால் அதை தன் குரல் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியன்.
எப்பேற்பட்ட இசையில் அமைந்த பாடலானாலும் சரி தன் இனிய குரலால் ரசிகர்களை உருகவைத்தவர். 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புரிந்தவர். ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் இவரின் குரல் பரவசப்படுத்தியது.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்று புதுமுகங்கள் வரை அனைத்து நடிகர்களுக்கும் இவரின் குரல் விருந்தாகியிருக்கின்றது. இவரின் புது முயற்சியால் மிகவும் பிரபலமான பாடல் கேளடி கண்மணியில் ‘மண்ணில் இந்த வானம்’ என்ற பாடலை மூச்சுவிடாமல் பாடி அசத்தியிருப்பார். இந்த நிலையில் இந்த பாடலை பற்றிய தன்னுடைய அனுபவத்தை நடிகரும் ரேடியோ ஜாக்கியாவாக இருந்த மிர்ச்சி சிவா கூறியிருக்கிறார்.
ஒரு சமயம் எஸ்பிபியை நேர்காணல் எடுத்த போது கேளடி கண்மணி பாடலை மிர்ச்சி சிவா அவரது பாணியில் அவரது சொந்த வரியில் பாடினாராம். அப்போது மூச்சு விடும் போது பாதாம் பால் வேண்டும் என சொல்லியே மூச்சு விட்டாராம். இதை பார்த்த எஸ்பிபி விழுந்து விழுந்து சிரித்து அழுகையே வந்துவிட்டதாம். அதன் பின் ஒரு விருது வழங்கும் விழாவில் எஸ்பிபிக்கு சிறந்த பாடகருக்கான விருதை கொடுக்க எஸ்பிபி வரவில்லையாதனால் அதை மிர்ச்சி சிவாதான் பெற்றிருக்கிறார். வாங்கிய விருதை எஸ்பிபியிடம் கொடுக்க போக அவரோ இதை நீயே வைத்துக் கொள்.உனக்கு தான் சரியாகும் என அன்றைக்கு மண்ணில் இந்த வானம் பாடலை பாடியதை நினைவு படுத்தி கூறினாராம் எஸ்பிபி.