Cinema History
நான் ரொம்ப பிஸி!.. கண்டிஷன் போட்டு நடித்த எஸ்.பி.பி!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!…
தமிழ் சினிமா இசை ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் தமிழை சரியாக கற்றுக்கொண்டு பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். துவக்கமே எம்.ஜி.ஆர் படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது.
அப்படி அவர் பாடிய பாடல்தான் ‘ஆயிரம் நிலவே வா’ என்கிற பாடல். அதன்பின் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையிலும் பல பாடல்களை பாடினார். ரஜினி மற்றும் கமல் படங்களுக்கு இசையமைத்த போது அவர்களுக்கு எஸ்.பி.பியை பாட வைத்தார் எம்.எஸ்.வி. அதன்பின் இளையராஜா வந்த பின் அவரின் இசையில் பல இனிமையான பாடல்களை எஸ்.பி.பி பாடினார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அவர் நோ சொல்லி இருக்கவே மாட்டார்… அதான் இதை செய்தோம்.. சீக்ரெட் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!…
தமிழ் சினிமா இசை ரசிகர்களுக்கு இளையராஜா – எஸ்.பி.பி கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே தேவகானம்தான். குறிப்பாக ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் ஆகியோரின் படங்களில் ராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய பல பாடல்கள் இப்போதும் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது.
எஸ்.பி.பி பாடுவதோடு மட்டுமில்லை. நிறைய படங்களில் நடித்தும் இருக்கிறார். எஸ்.பி.பியை முதலில் நடிக்க வைத்தவர் இயக்குனர் பாலச்சந்தர்தான். அவர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்கிற படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். அழகான கதாபாத்திரம் அது. அதில் கச்சிதமாக நடித்திருந்தார் எஸ்.பி.பி.
இதையும் படிங்க: அஜித்தை பத்தி என்கிட்ட அப்படி சொன்னாங்க!. நடிக்க மாட்டேன்னு சொன்னேன்!.. நடிகர் பேட்டி…
பாலச்சந்தரின் சிஷ்யர்களில் ஒருவர் வஸந்த. அவர் இயக்கிய முதல் படம் கேளடி கண்மணி. இந்த படத்தின் கதையை எழுதும்போதே அதில் எஸ்.பி.பியை நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார். ஆனால், அப்போது தினமும் 15 பாடல்கள் வரை பாடி பிஸியாக இருந்த எஸ்.பி.பி. அந்த படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.
ஆனால், வஸந்த் தொடர்ந்து வற்புறுத்தவே தினமும் 2 மணி நேரம் மட்டும்தான் கால்ஷீட் கொடுப்பேன் அதற்கு மேல் நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போட்டு நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.