அந்தப் பாட்டைப் பாடுவதற்குள் பாடாய்படுத்திய டி.ராஜேந்தர்... ஆளவிட்டா போதும்கற நிலைமைக்கு போன எஸ்பிபி.
80 முதல் 90 காலகட்டங்களில் டி.ராஜேந்தர் படம் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதிலும் பாடல்கள் செம மாஸா இருக்கும்.
'மைதிலி என்னை காதலி' படத்தில் 'நானும் உந்தன் உறவை' என்ற பாடல் வரும். டி.ராஜேந்தர் எழுத, எஸ்பிபி பாடிய பாடல். ஹீரோ காதலிக்காக குத்து பட்ட காயத்தோடு காதலியைப் பார்க்க வருகிறார். அவர் பரதநாட்டியம் ஆடிக்கொண்டு இருக்கிறார். அப்போதே ஹீரோ பாடியபடி இறந்துவிடுகிறார். அப்போது ஆடும் காதலியின் சலங்கை தெறித்து விழுகிறது.
இதையும் படிங்க... விஜயின் அரசியல் அஜித்தை இந்தளவு மாத்திடுச்சா? இறங்கி வேலை பார்க்கும் தல
இந்தப் பாடலைப் பாடும்போது எஸ்பி.பி. ஒருவன் கத்திக்குத்து பட்டால் எப்படி அழுதபடி பாடுவானோ அதே பாவத்தில் பாடியிருப்பார். இன்னொரு பக்கம் பரதநாட்டியத்திற்கான இசையை அருமையாக பண்ணியிருப்பார் டி.ஆர்.
தபேலா, மிருதங்கம், ஜண்டை, வீணை, குழல், ஸ்டிரிங்ஸ் என அனைத்து கருவிகளிலும் அருமையாக விளையாடி இருப்பார்.
பல்லவியிலேயே அருமையான வரிகளைப் போட்டு இருப்பார். நானும் உந்தன் உறவை, நாடி வந்த பறவை, தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை சிறகுகள் முளைந்ததடி, குருதியில் நனைந்ததடி... என்ன அருமையான வரிகள் என்று பாருங்கள்.
அதே போல சரணங்களிலும் கவிதை வரிகள் நயமாக இருக்கும். கடைசியில் முடிக்கும்போது வாழ்வது ஒருமுறை உனக்கென வாழ்வது பெருமை என்பேன். சாவது ஒருமுறை உனக்கென சாவது பெருமை என்பேன் என காதலின் வீரியத்தை உணர்த்தியிருப்பார் டி.ஆர்.
இந்தப் பாடலை உருவாக்குவதற்குள் எஸ்பிபியை டி.ஆர். பாடாய் படுத்திவிட்டாராம். இவர் மதியம் 2 மணி முதல் 9 மணிக்குள் பாட வந்தால் 7 பாட்டு வரை பாடி விடுவாராம். டிஆர் எஸ்பிபியை பாடுவதற்காக அழைக்கிறார்.
இந்தப் பாடலைப் பாடுகிறார் எஸ்பிபி. அப்போது டிஆருக்குத் திருப்தி இல்லை என்றால் 'என் பாலு இதை விட இன்னும் நல்லா பாடுவாரே...'ன்னு சொல்லி சொல்லியே வேலை வாங்கிடுவாராம்.
அதைக் கேட்டதும் எஸ்பிபி வேறொரு பாவத்துல பாடுவாராம். ஆனா எஸ்பிபிக்கு பாடும்போது அவருக்குத் திருப்தியா இருக்குமாம். ஆனா டிஆருக்குத் திருப்தி இல்லாம மறுபடியும் மறுபடியும் பாட வைத்தாராம்.
இதையும் படிங்க... பிரபுவை பேச முடியாமல் செய்த எஸ்.பி.பி… அப்படி என்னதான் நடந்தது?
அப்படியே இந்தப் பாடல் அவர் கொடுத்த கால்ஷீட்டையும் தாண்டி பாடி முடிப்பதற்குள் நைட் 12மணிக்கு மேல ஆகிவிட்டதாம். வழக்கமான நேரத்தையும் தாண்டி 3 மணி நேரம் அதிகமாகி விட்டதாம். காரணம் என்னன்னா டிஆர். இன்னும் ஃபீல் வேணும் வேணும்னு சொல்லி சொல்லி அவருக்குப் பிடித்த மாதிரி பாடல் வர இவ்ளோ நேரமாச்சுதாம்.
மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.