லியோவுக்கு ‘No' அயலானுக்கு மட்டும் Yes... செம கடுப்பில் விஜய் ரசிகர்கள்...

Ayalan: சிவகார்த்திகேயனுக்கு எல்லாவிதத்திலும் இது போதாத காலம் போல. ஏற்கனவே சில படங்களை தயாரித்ததில் 100 கோடி வரை கடன் ஏற்பட்டு பல வருடங்களாக கடனாளியாக இருக்கிறார். 4 படங்களின் சம்பளத்தை அப்படியே கொடுத்து விடுகிறேன் என சொல்லி ஒவ்வொரு படத்திலும் எஸ்கேப் ஆகி வந்தார்.
‘பணத்தை கொடு இல்லனா படம் ரிலீஸ் ஆகாது’ என ஃபைனான்சியர்கள் நெருக்கினால் அவர் நடிக்கும் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்து விடுவார். இப்படி செய்தால் படத்தின் ரிலீஸுக்கு கட்டை போட யாரும் வரமாட்டார்கள் என்பது சிவகார்த்திகேயனின் எண்ணம்.
இதையும் படிங்க: ரைட்டு! தக் லைஃபில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை! திரிஷா ஆசையில மண்ணப்போட்டீங்களேப்பா!
அவரின் நடிப்பில் இப்போது உருவாகியிருக்கும் திரைப்படம் அயலான். இப்படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்த படம் ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையாகவே உருவாகியுள்ளது. வெண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன் சிவகார்த்திகேயனிடம் வர அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் சிறப்பாக உருவாகியிருப்பதாகவும், கண்டிப்பாக இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு படமாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கமலுடன் நடிக்கும்போது கதறி அழுதேன்.. சினிமாவே வேண்டாம் என போய்விட நினைத்த சில்க் ஸ்மிதா…
அயலான் திரைப்படம் வருகிற 12ம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தமிழகத்தில் ரசிகர்களுக்காக அதிகாலை காட்சி திரையிடப்படும். அப்போது தியேட்டரில் அதிகவிலைக்கு டிக்கெட்டுகளை விட்டு கல்லா கட்டுவார்கள். அந்தவகையில், அயலான் படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
விஜயின் நடிப்பில் உருவான லியோவுக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், அயலான் படத்திற்கு அனுமதி அளித்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அவருக்கு முன்னாடி நான்லாம் சின்ன பையன்!.. சிவாஜியையே பிரமிக்க வைத்த நடிகை…