ஒவ்வொரு தீபாவளிக்கும் சினிமா ரசிகர்கள் தங்களது ஆஸ்தான ஹீரோக்களின் படங்களை கொண்டாடி தீர்ப்பார்கள். அந்த கால கட்டங்களில் இப்போது உள்ளது போல இல்லமல் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் போட்டியிடும்.
அந்த வகையில் 1985ம் அண்டு தீபாவளி அன்று ரஜினி காந்த் நடித்த படிக்காதவன், கமல்ஹாசன் நடிப்பில் ஜப்பானில் கல்யாண ராமன், பக்யராஜ் நடிப்பில் சின்ன வீடு, சிவக்குமார் நடிப்பில் சிந்து பைரவி மற்றும் கரையைத் தொடாத அலைகள், பிரேம பாசம்,ஆஷா , பெருமை ஆகிய படங்கள் வெளியாகின. இந்த 4 படங்களுமே இளையராஜா இசையில் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
1.படிக்காதவன்
ரஜினிகாந்த, சிவாஜி, அம்பிகா நடிப்பில் வெளியான படம் படிக்காதவன். ராஜசேகர் இயக்கத்தில் வந்த இப்படத்தின் பாடல்கள் சூப்ப்ர் ஹிட் ஆகின. அண்ணன் தம்பிக்கிடையேயான பாசம், கருத்துமோதல் என குடும்பங்கள் கொண்டாடும் வித்ததில் இப்படம் வெளியானதால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று படம் ஹிட் அடித்தது.
2. ஜப்பானில் கல்யாண ராமன்
பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன், ராதா, கவுண்டமணி, சத்யராஜ என பலர் நடித்திருந்தனர். கல்யாண ராமன் படம் சூபப்ர் ஹிட்டை தொடந்து அதன் இரண்டாம் பாகமாக இப்படம் வெளிவந்தது. படம் முழுவதுமே ஜப்பானில் படமாக்கப்பட்டிருந்தது. பாடல்கள் நன்றாக இருந்தும் படம் தோல்வியையே தழுவியது.
3. சின்ன வீடு

அன்றைய காலகட்டத்தில் பாக்யராஜ் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. குறிப்பாக பெண்கள் கூட்டம் கூட்டமாக இவரது படத்திற்கு படையெடுத்தனர். அந்த வகையில் சின்ன வீடு படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்தது.பாக்யராஜுடன் கல்பனா,ஜெய்கணேஷ் என பலர் நடித்திருந்தனர். வசூலில் படிக்காதவனுக்கு நிகராகவே இருந்தது என்று கூறுவார்கள்.
4. சிந்துபைரவி
பாலசந்தர் இயக்கத்தில் சிவக்குமார், சுஹாசினி,சுலக்சனா , டெல்லி கணேஷ் என பலர் நடித்திருந்தனர். பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். நல்ல கதை அம்சத்துடன் வந்த இந்த படம் அதிக நாட்கள் ஓடியது. அதுமட்டுமின்றி தேசிய வருதுகளையும் தட்டி சென்றது.சிவகுமார் நடிப்பில் அதே நாளில் வெளியான பிரேம பாசம் தோல்வியையே தழுவியது. இது போக வெளியான படஙள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
