ரஜினி முகத்தில் காரித் துப்பிய ஸ்ரீதேவி.. அதிர்ந்து போன படக்குழு!.. இது எப்ப நடந்துச்சு தெரியுமா?...
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக எப்போதும் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் பட்டத்துக்குதான் இப்போது பல நடிகர்களும் போட்டி போட்டு வருகின்றனர். சினிமாவில் கஷ்டப்பட்டு நுழைந்து துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒருகட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறியவர் நடிகர் ரஜினி. இவர் நடித்து வெளியான 95 சதவீத திரைப்படங்கள் வெற்றியை பெற்றது. அதனால்தான் அவருக்கு சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் கிடைத்தது.
அதேபோல், 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக மாறியவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமலுடன் இவர் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் கலக்கியுள்ளார்.
ஒரு சினிமா படப்பிடிப்பில் ஸ்ரீதேவி ரஜினியை காரி துப்பிய சம்பவம் நடந்தது என சொன்னால் நம்புவீர்களா? ஆம்.. உண்மையில் இது நடந்தது. பாராதிராஜா இயக்கத்தில் ஸ்ரீதேவி அறிமுகமாகிய 16 வயதினிலே படத்தின் படப்பிடிப்பில்தான் இந்த சம்பவம் நடந்தது. இந்த படத்தில் மயில் என்கிற வேடத்தில் ஸ்ரீதேவியும், சப்பாணியாக கமலும், பரட்டையாக ரஜினியும் நடித்திருப்பார்கள். கதைப்படி அம்மாவை இழந்து தனிமையில் இருக்கும் ஸ்ரீதேவிக்கு கமல் ஒத்தாசையாக இருப்பார். ஸ்ரீதேவியை எப்படியாவது அடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் ரஜினி இருப்பார்.
ஒருகாட்சியில் ரஜினியின் முகத்தில் ஸ்ரீதேவி காரி துப்புவதுபோல் காட்சி எடுக்கப்பட்டது. ஸ்ரீதேவி துப்புவது போல் நடிக்க, ரஜினியின் முகத்தில் சோப்பு நுரை வைத்து எச்சில் போல் எடுத்துள்ளனர். ஆனால், அது சரியாக வரவில்லை. என்னென்னவோ செய்தும் அந்த காட்சியில் பாரதிராஜாவுக்கு திருப்தி இல்லை. ஒருகட்டத்தில் ‘அந்த பொண்ணை என்னை உண்மையாகவே துப்ப சொல்லுங்கள். அதுதான் சரியாக வரும்’ என ரஜினி சொல்ல அப்படியே அந்த காட்சி எடுக்கப்பட்டது.
நடிப்புக்காக ரஜினி எந்த இமேஜையும் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிம்புவை சண்டைக்கு இழுத்த சூரி.. ஜெயிக்கப் போவது யார்?.. காத்திருப்போம்!