அதுல நான் நடிக்க கூடாதுனு பெரிய எதிர்ப்பு! அதையும் மீறி ஹிட் கொடுத்த ஸ்ரீகாந்த்.. என்ன படம் தெரியுமா?

Published on: March 13, 2024
srikanth
---Advertisement---

Actor Srikanth: ரோஜாக் கூட்டம் என்ற ஒரு அழகான காதல் காவியம். அந்தப் படத்தின் மூலம் இளம் பெண்களின் மனதை கவர்ந்தார் நடிகர் ஸ்ரீகாந்த். முதன் முதலில் இந்தப் படத்தின் மூலம்தான் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். முதல் படமே அட்டகாசமான வெற்றி. குறிப்பாக படத்தில் அமைந்த பாடல்கள் பெரிய அளவில் ஹிட். இப்போது வரைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலாக ‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ’ என்ற பாடல்தான்.

இப்படி பெரிய வரவேற்புடன் சினிமாவிற்குள் நுழைந்த ஸ்ரீகாந்த் தொடர்ந்து காதல் கதைகளை அடிப்படையாக கொண்ட படங்களிலேயே நடித்து இளசுகளின் கள்வனாக மாறினார். ‘மனசெல்லாம்’ படம் மனதை வருடிய படமாக அமைந்தது. உருகி உருகி நடிப்பதில் ஸ்ரீகாந்தை அடிச்சுக்க யாருமே கிடையாது. சார்மிங், லவ்வர் பாயாக வலம் வந்த ஸ்ரீகாந்துக்கு ஒரு கட்டத்திற்கு மேலாக பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதையும் படிங்க: ‘தல’ங்கிற பேர் யாருக்கு வரவேண்டியது தெரியுமா? அசால்ட்டா தட்டி தூக்கிய அஜித்.. இது தெரியாம போச்சே

நீண்ட நாளுக்கு பிறகு நண்பன் படத்தின் மூலம் மீண்டும் தோன்றினார். அந்தப் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்த ஸ்ரீகாந்தின் கதாபாத்திரம் பேசும்படியாகவே அமைந்தது. அதனை அடுத்து காதல் வித் காஃபி படத்தில் நடித்தார் ஸ்ரீகாந்த். ஆனால் அது எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்த நிலையில் சத்தமின்றி முத்தம் தா என்ற படம் சமீபத்தில்தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

அதுபோக இன்னும் கைவசம் படங்களை வைத்திருக்கும் ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவருடைய அனுபவங்களை பற்றி பகிர்ந்தார். அவர் நடித்த படத்தில் மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படமாக அமைந்தது ‘பூ’ திரைப்படம். இந்தப் படத்தை சசி இயக்கினார். இவர்தான் ஸ்ரீகாந்தை அறிமுகப்படுத்தியவர். ஆனால் பூ படத்தில் சசியை தவிர மற்ற யாருக்கும் ஸ்ரீகாந்த் நடிப்பதில் உடன்பாடே இல்லையாம். இதை சசி ஸ்ரீகாந்திடம் சொல்லி ‘எல்லாரும் எதிர்க்கிறார்கள். அதனால் கண்டிப்பாக நீதான் நடிக்கனும்’ என ஸ்ரீகாந்திடம் சொன்னாராம்.

இதையும் படிங்க:பிரசாந்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த தியாகராஜன்!. அட இவ்வளவு நடந்திருக்கா!..

அதன் பிறகு அந்தப் படத்தில் நடித்து மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தேன் என்றும் சசி என் நடிப்பை பார்த்து அழுவிட்டார் என்றும் ஸ்ரீகாந்த் கூறினார். அதிலும் அந்தப் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் ஸ்ரீகாந்த் அவர் மனைவியுடன் இருக்கும் சூழ்நிலையை ஹீரோயின் பார்வதி தண்ணீர் தொட்டிக்கு பின்னாடி இருந்து பார்த்துக் கொண்டிருப்பார். அதை ஸ்ரீகாந்த் பார்த்துவிட என்ன செய்வதென்று தெரியாமல் முழிப்பார் ஸ்ரீகாந்த்.

ஆனால் உண்மையிலேயே சூட்டிங் சமயத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கும் போது ஹீரோயினே அந்த சீனில் இல்லையாம். வெறும் கேமிராவை பார்த்துதான் முழுவதுமான உணர்வுகளை வெளிப்படுத்தினாராம் ஸ்ரீகாந்த்.

இதையும் படிங்க: அவருக்கு முன்னாடி நான் போயிடனும்… உருக்கமாக சொன்ன ரஜினிகாந்த்.. யாரிடம் தெரியுமா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.