அஜித் வீட்டிற்கு வந்த ரெய்டு!.. பிரச்சினை இங்கதான் ஸ்டார்ட் ஆச்சு.. சக்கரவர்த்தியும் அஜித்தும் பேசாத காரணம்..

by Rohini |   ( Updated:2023-05-02 10:29:34  )
ss
X

ajith ss chakaravarthy

கோலிவுட் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித். ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் அஜித் அவருடைய படங்கள் தான் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைகின்றது.

இப்போது கூட மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே அவருடைய ஏகே 62 படத்தின் டைட்டிலை இப்பொழுதுதான் அறிவித்திருக்கிறார்கள். விடா முயற்சி என பெயரிடப்பட்டுள்ள ஏகே 62 படத்தின் டைட்டிலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படி பல பெருமைகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக விளங்கும் நடிகர் அஜித்தின் வாழ்க்கையில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் பிரபல தயாரிப்பாளரான எஸ் எஸ் சக்கரவர்த்தி.

எஸ் எஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் இருந்த நட்பை பிரபல திரைப்பட இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் சக்கரவர்த்தியின் மறைவின் சமயம் பேட்டியின் மூலம் கூறினார். அதாவது சக்கரவர்த்தி எப்பொழுதுமே நடிகர் அஜித்தை ஒரு மார்க்கெட் நடிகராக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவராக இருப்பாராம்.

அஜித்தின் கரியரில் மிகவும் திருப்பு முனையாக அமைந்த பெரும்பாலான படங்களை தயாரித்தவர் எஸ் எஸ் சக்கரவர்த்தி தான். விஜயகாந்துக்கு எப்படி ராவுத்தர் ஒரு பக்க பலமாக இருந்தாரோ அதேபோல அஜித்தின் ஆரம்ப கால வாழ்க்கையில் சக்கரவர்த்தியும் மிகவும் உறுதுணையாக இருந்தவர்.

அப்படி நட்பிற்கு அடையாளமாக இருந்த இருவருக்குள்ளும் சில பல பிரச்சனைகள் எழுந்தன. அது என்ன என்று யாருக்குமே இதுவரை தெரியாமல் இருந்தது. என்ன காரணம் என்பதை ரவிக்குமார் கூறினார்.

அதாவது வரலாறு படத்தில் படப்பிடிப்பின் சமயத்தில் ஏதோ பண பிரச்சினை ஏற்பட்டதாம். இப்போது சக்கரவர்த்தியும் அஜித்தும் கவுன்சிலை அணுகினார்களாம். அந்த கவுன்சில் மூலமாகத்தான் இருவருக்கும் இருந்த அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டதாகவும் அதிலிருந்து இருவரும் பேசவில்லை என்றும் கூறினார்.

இதையும் படிங்க : இந்தியன் 2 படக்குழு தென் ஆஃப்ரிக்கா போனதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?… வேற லெவலா இருக்கே!

அதுமட்டுமில்லாமல் வில்லன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் படப்பிடிப்பு ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே அஜித் வீட்டிற்கும் சக்கரவர்த்தி வீட்டிற்கும் ரெய்டு வந்ததாம் . அப்போது சக்கரவர்த்தி அஜித்திடம் நீங்கள் இதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். படப்பிடிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி வில்லன் படத்தின் படப்பிடிப்பை நடத்த சொல்லி இருக்கிறார். இப்படி தனக்கு பக்க பலமாக இருந்த சக்கரவர்த்தியின் மறைவிற்கு அஜித் வராததை எண்ணி பிரபலங்களும் ரசிகர்களும் ஊடகங்களும் வேதனையாக கூறி வருகின்றனர்.

Next Story