Connect with us
Indian 2

Cinema News

இந்தியன் 2 படக்குழு தென் ஆஃப்ரிக்கா போனதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?… வேற லெவலா இருக்கே!

ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கி, இத்திரைப்படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிப்போனது. அதன் பின் கொரோனா தொற்று பரவிய நிலையில் “இந்தியன் 2” திரைப்படம் டிராப் என்றே அறிவிக்கப்பட்டது. அதன் பின் இத்திரைப்படத்தில் நடித்த விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் இவ்வுலகை விட்டு பிரிந்தனர். விவேக், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இதுதான்.

அதன் பின் கடந்த ஆண்டு “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயன்ட் நிறுவனமும் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து “இந்தியன் 2” படக்குழு ஏன் தென் ஆஃப்ரிக்காவிற்கு சென்றனர் என்பது குறித்தான சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரயிலில் சண்டைக் காட்சிகள் நடப்பது போல் படமாக்க முடிவு செய்திருந்தாராம் ஷங்கர். அதற்காக 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற பழங்கால ரயில் நிலையத்தை தேடிக்கொண்டிருந்தபோது தென் ஆஃப்ரிக்காவில் அப்படிப்பட்ட ஒரு பழங்கால ரயிலை அந்நாட்டு அரசு பாதுகாத்து வருவதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

அதன் பின் தென் ஆஃப்ரிக்காவிற்கு சென்று அந்த ரயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்று, மொத்த படக்குழுவினரையும் அழைத்துச் சென்று அங்கே அந்த சண்டைக் காட்சியை மிகப் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளாராம் ஷங்கர்.

இதையும் படிங்க: நான் சொன்னா கேக்குற ஆளா இயக்குனர்!.. விரக்தியடைந்த ஜெயம் ரவி.. ஆறுதல் கூறிய சிம்பு!

google news
Continue Reading

More in Cinema News

To Top