கோட் ரிலீஸ் வரைக்கும் கம்முனு இருக்கணும்! அடக்கி வைத்த விஜய்.. ஒரு முடிவோடதான் இருக்காரு..

by Rohini |   ( Updated:2024-08-10 11:10:57  )
vijay
X

vijay

Goat Movie: நடிகர் விஜய் கோட் படம் ரிலீஸாகும் வரை அரசியல் சார்ந்த எந்தவொரு அறிவிப்பையும் வெளியிட வேண்டாம் என தன் தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தற்போதைய செய்திகள் கூறப்படுகிறது. கோட் படத்திற்கு பிறகு விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கப் போவதாகவும் அதன் பிறகு படங்களில் நடிக்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியானது.

விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனியாக கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி சார்பான கூட்டம் , ஆலோசனை என அடுத்தடுத்து நிர்வாகிகளை வைத்து விஜய் அவ்வப்போது நடத்திக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் கட்சியின் பெயர், கொடி, கொள்கை என எதையுமே இன்று வரை விஜய் தெரியப்படுத்தவில்லை.

இதையும் படிங்க: அப்பாவியாக நடித்த சைதன்யா… சமந்தாவை பழிகடாவாக்கிய வக்கிர பின்னணி…

அதற்கு முன்பாக தான் இப்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படமான கோட் திரைப்படம் ரிலீஸாகும் வரை கட்சி சம்பந்தமான எந்த ஒரு தகவலையும் வெளியிட வேண்டாம் என தன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம் விஜய்.

கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. செப்டம்பர் கடைசி தேதி அல்லது அக்டோபரில் கட்சி சார்பாக ஒரு பெரிய மாநாடு நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. கோட் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் , மீனாட்சி சௌத்ரி, சினேகா ஆகியோர் லீடு ரோலில் நடிக்கும் திரைப்படம்.

இதையும் படிங்க: இத செஞ்சா இருக்கிற இடுப்பும் போயிடுமே! முதன் முறையாக இடுப்பழகின் ரகசியத்தை பகிர்ந்த சிம்ரன்

இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, அஜ்மல் , மோகன் போன்ற பல நடிகர்களும் நடித்திருக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ஓரளவு எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

vijay1

vijay1

இந்த நிலையில் கோட் படத்திற்கு பிறகு தளபதி 69 திரைப்படத்திலும் விஜய் நடிப்பதாக தெரிகிறது. ஆனால் அந்த படத்தில் தலைப்பு மற்றும் நடிக்க போகும் நடிகர்கள் பற்றி இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கோட் படம் ரிலீஸுக்கு பின்பே ஒவ்வொன்றாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: தளபதி படத்துல யாராவது இந்த விஷயத்தை எல்லாம் கவனிச்சீங்களா? பிரமிக்க வச்சிருக்காங்களே…!

Next Story