டேய் சண்டைக்கு வாடா!.. கவுண்டமணி காமெடி உருவானதன் பின்னணி இதுதான்!…

Published on: May 14, 2024
goundamani
---Advertisement---

தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கும் மேல் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர்தான் கவுண்டமணி. செந்திலுடன் கூட்டணி அமைத்து இரட்டையர்களாக இருவரும் இணைந்து பல படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர். பல திரைப்படங்களின் வெற்றிக்கு கவுண்டமணி – செந்தில் காமெடி முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

90களில் இரண்டாவது ஹீரோ போல கதாநாயகர்களுடன் இணைந்து எல்லா காட்சியிலும் வந்தார் கவுண்டமணி. அதோடு, அவருக்கென சண்டைக்காட்சி, டூயட் எல்லாம் கூட இருந்தது. இது எல்லாமே கவுண்டமணி தனக்காக கேட்டு வாங்கி கொண்டதுதான். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளம் என முதலில் வாங்கிய நகைச்சுவை நடிகர் இவர்தான்.

இதையும் படிங்க: சினிமாவே சத்திரம்னு வந்துட்டயா?… இயக்குனரை கலாய்த்த கவுண்டமணி.. நடந்தது இதுதான்!..

ஹாலிவுட்டில் லாரன் ஹார்டி போல கோலிவுட்டில் கவுண்டமணி – செந்தில் காமெடி பல நூறு படங்களிலும் நடித்து சாதனை படைத்தனர். சத்தியராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், ராமராஜன் ஆகியோரின் படங்களில் பெரும்பாலும் கவுண்டமணி – செந்தில் நடித்தனர். கவுண்டமணி பேசும் விதம் பிடிக்காது என்பதால் ரஜினி, கமல் ஆகியோர் அவருடன் அதிகம் நடிக்கவில்லை.

சுந்தர் சி இயக்கத்தில் கவுண்டமணி நடித்த எல்லா படங்களுமே காமெடி சரவெடிதான். குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேபோல், உனக்காக எல்லாம் உனக்காக படத்திலும் கார்த்திக்குடன் இணைந்து கவுண்டமணி கலக்கி இருந்தார்.

குறிப்பாக ஒரு காட்சியில் சாப்பாடு பந்தியில் ஒரு பெரிய செங்கல்லை வைத்து ‘சப்பாட்டுல கல்லு.. சண்டைக்கு வாடா’ என பெண் வீட்டுக்காரர் ஒருவரை கவுண்டமணிக்கு சண்டைக்கு அழைப்பார். ஆனால், அவரோ சிரித்துகொண்டே போய்விடுவார். இந்த காட்சி உருவானதன் பின்னணி குறித்து சுந்தர் சி ஊடகம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பப்புக்கு லுங்கியோடு வந்த கவுண்டமணி! ‘மேட்டுக்குடி’ பட சூட்டிங்கில் நடந்த காமெடியான சம்பவம்

கவுண்டமணி சார் ஒரு புதிய காரை வாங்கி அவரே ஓட்டி வந்தார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அவர் வந்து கொண்டிருந்தபோது ஒரு பேருந்து அவரின் கார் மீது மோதிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி வந்த டிரைவர் கவுண்டமணியை பார்த்தவுடன் ‘சார் நீங்களா?’ என ஜாலியாக பேசியிருக்கிறார். அதன்பின் அங்கு வந்த கண்டக்டரும் ‘சார் நீங்களா.. செந்தில் வரலயா?’ என ஜாலியாக பேசியிருக்கிறார். இதனால் அவர்களுடன் சண்டை போடாமல் வந்திருக்கிறார் கவுண்டமணி..

இதை சுந்தர் சி-யிடம் சொன்ன கவுண்டமணி ‘சண்டைக்கு வர மாட்டேங்குறானுங்கப்பா’ என சொல்ல அதை வைத்து அந்த காமெடியை உருவாக்கி இருக்கிறார் சுந்தர் சி. அந்த காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.