எஸ்.ஏ.சி-க்கு நடந்த ஆபரேஷன்!.. பதறி ஓடிய விஜய்!.. அப்பா - மகன் இணைந்த ஸ்டோரி இதுதானாம்!..

நடிகர் விஜய் அவரின் அப்பாவை நேரில் பார்த்து நலம் விசாரித்த சம்பவம்தான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், கடந்த சில வருடங்களாக விஜய்க்கும், அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. பேச்சுவார்த்தையும் இல்லை.

அப்பாவால் சினிமாவுக்கு வந்தாலும் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரூட்டை பிடித்த பின் எஸ்.ஏ.சி இயக்கத்தில் நடிப்பதை விஜய் நிறுத்திவிட்டார். பலமுறை எஸ்.ஏ.சி கால்ஷீட் கேட்டும் கூட அவர் கொடுக்கவே இல்லை. எனவே, விஜயின் ரசிகர் மன்றங்களை நிர்வகிக்க துவங்கினார் எஸ்.ஏ.சி. விஜயை எப்படியாவது அரசியலில் பெரிய ஆளாக்க வேண்டும் என்பதுதான் எஸ்.ஏ.சி-யின் ஆசையாக இருந்தது.

இதையும் படிங்க: இருக்கு ஆனா இல்ல! விஜய் மேல இவ்ளோ பைத்தியமா? நடிகையிடம் ஆசையை தூண்டி வேடிக்கை பார்த்த அட்லீ

ஒருகட்டத்தில் சில காரணங்களால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விஜய் சாலிகிராமத்திலிருந்து வெளியேறி நீலாங்கரையில் தனி பங்களா கட்டி குடியேறினார். அதன்பின் அவர் அப்பா எஸ்.ஏ.சி-யிடம் பேசவே இல்லை. விஜய் தனிக்கட்சி துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த இது அப்பா செய்த வேலை என தெரிந்ததும் பொங்கியெழுந்தார் விஜய். அப்பாவுடன் ரசிகர் மன்றத்தினர் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என அறிக்கை விட்டார்.

அதன்பின் பல வருடங்களாக அவர் எஸ்.ஏ.சி-யை சந்திப்பது இல்லை. விஜய் அவ்வப்போது என்னை நேரில் வந்து பாத்தால் போதும் என ஊடகங்களில் பேட்டியே கொடுத்தார் எஸ்.ஏ.சி. விஜயை பார்க்க அவரின் வீட்டுக்கு போன போது கூட அம்மா ஷோபாவை மட்டுமே விஜய் பார்க்க விரும்பியதாக கூட செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: சோலிய முடிச்சுருவாங்கே போல! விமான நிலையத்தில் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி – ‘லியோ’வை காலிபண்ண இதுவே போதும்

இந்நிலையில், அப்பா - மகன் சந்திப்பு இப்போது நடந்துள்ளது. எஸ்.ஏ.சிக்கு தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தபின் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்ல அப்படியே நடந்தது. இந்த தகவலை ஆடியோ மூலம் ரசிகர்களுக்கு சொன்னார் எஸ்.ஏ.சி.

இந்த ஆடியோவை கேட்ட விஜய்க்கு அப்பா மீது பாசம் வந்து அமெரிக்காவிலிருந்து வந்த உடனேயே நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்திருக்கிறார். இதனால், அம்மா ஷோபாவும் , அப்பா எஸ்.ஏ.சியும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். எப்படியோ ‘அப்பாவையே ஒதுக்கி வைத்துள்ளார்’ என்கிற கெட்டபெயர் இதன்மூலம் விலகியுள்ளது.

இதையும் படிங்க: ஆடியோ விழாவுக்கு கேட்டை இழுத்து மூடிய ஸ்டேடியம்! விஜய்னா நோ.. இது என்னப்பா புது பிரச்சினையா இருக்கு?

 

Related Articles

Next Story