Connect with us
ar rahman

Cinema News

மதுபோதையில் வந்த இசைக்கலைஞர்!.. இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் சேர்ந்தது இப்படித்தான்!..

AR Rahman: ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே வித்தியாசமான இசையால் ரசிகர்களை கவர்ந்தார். ரஹ்மான் கொடுத்த ஒலிகள் இசை ரசிகர்களுக்கு புதிதாகவும், புதிய அனுபவத்தையும் கொடுத்தது. அவருக்கு ரசிகர்களும் உருவானர்கள்.

ரஹ்மான் கொடுத்த வெஸ்டர்ன் இளசுகளை ஆட்டம் போட வைத்தது. சிக்கு புக்கு சிக்கு ரயிலேவும், ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி ஆகிய பாடல்கள் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறியது. ரஹ்மான் இசையமைத்தால் படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ பாடல் சிறப்பாக இருக்கும் என நம்பி ரசிகர்கள் தியேட்டருக்கு போனார்கள்.

இதையும் படிங்க: தாழ்த்தி பேசியவர்களுக்கு பாட்டு மூலம் பதிலடி கொடுத்த இளையராஜா… எப்படினு தெரியுமா?…

முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ந்து ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ் என ரவுண்டி கடித்து நம்பர் ஒன் இசையமைப்பாளராகவும் மாறினார். ஒருபக்கம் பாலிவுட்டுக்கு சென்று அவர் போட்ட பாடல்கள் பாலிவுட்டை அதிர வைத்தது.

satish

இவரின் அப்பா சேகர் மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எனவே, சிறு வயது முதலே இசையை முறையாக கற்றுக்கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். 80களில் இவர் வேலை செய்யாத பெரிய இசையமைப்பாளர்களே இல்லை என சொல்லுமளவுக்கு பலரிடம் கீபோர்டு வாசித்திருக்கிறார். இத்தனைக்கும் அப்போது அவருக்கு வயது 12.

இதையும் படிங்க: பயில்வான் காலில் விழுந்த இசைஞானி இளையராஜா!… அதை செய்ய வைத்த பிரபலம்!.

ரஹ்மான் எப்படி இளையராஜாவிடம் கீ போர்டு வாசிப்பவராக சேர்ந்தார் என்பது ஒரு தனிக்கதை. மூடுபனி படத்திற்கு இளையராஜா இசையமைத்து கொண்டிருந்த நேரம். ஒருநாள் பாடல் ஒலிப்பதிவின்போது கீ போர்டு வாசிப்பவர் மது அருந்துவிட்டு வந்துவிட்டார். தனது குழுவில் யாரேனும் குடித்துவிட்டு வந்தால் இளையராஜாவுக்கு கடுமையான கோபம் வரும். எனவே, அவரை வெளியே அனுப்பிவிட்டார்.

அப்போது ஏ.ஆர்.ரகுமான் பெயரை ஒருவர் சொல்லி நமது சேகரின் மகன் என சொல்ல ‘வரச்சொல்’ என ராஜா சொல்ல ரஹ்மான் அங்கு சென்றார். அப்போது அவரின் பெயர் திலீப். அதன்பின் புன்னகை மன்னன் உட்பட ராஜா இசையமைத்த பல படங்களில் ரஹ்மான் கீ போர்டு வாசித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ஒன்னுமே தோணல.. சேட்டையை ஆரம்பிச்ச இளையராஜா…

google news
Continue Reading

More in Cinema News

To Top