சீதாவை கடத்தி திருமணம் செய்த பார்த்திபன்!.. இத வச்சி ஒரு சினிமாவே எடுக்கலாம்!.. பரபர பிளாஷ்பேக்!..
புதிய பாதை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். திரைக்கதை மன்னன் கே.பாக்கியராஜிடம் சினிமா கற்றவர் இவர். புதிய பாதை மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர். அதானாலேயே இவருக்கு ரசிகர் கூட்டம் உண்டு.
புதிய பாதை படம் உருவாகும் போது அப்படத்தில் நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தும்விட்டனர். இப்போது சீதா, பார்த்திபன் இருவருமே தனியாகவே வசித்து வருகிறார்கள். இந்நிலையில், பார்த்திபன் - சீதா திருமணம் எப்படி நடந்தது என்பது வெளியே தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: ரஜினிக்காக சாப்பிடாமல் விரதம் இருந்த ஸ்ரீதேவி… அதுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?
சீதாவுக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை. ஆனால், பணத்தாசை காரணமாக அவரின் அப்பா அவரை தொடர்ந்து படங்களில் நடிக்க வற்புறுத்தி வந்துள்ளார். என்ன சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது கூட சீதாவுக்கு தெரியாது. இதிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என சீதா நினைத்தபோதுதான் அவருக்கு பார்த்திபனுடன் காதல் உருவானது.
பார்த்திபன் - சீதா காதல் விவகாரம் சீதாவின் அப்பாவுக்கு தெரியவர கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மேலும், படப்பிடிப்பு, கோவில், ஹோட்டல் என சீதா எங்கு போனாலும் ஆள் வைத்து அவரை கண்காணிக்கும் வேலையும் செய்திருக்கிறார். ஒருநாள் சீதாவிடமிருந்து பார்த்திபனுக்கு ஒரு கடிதம் வந்தது.
இதற்கு மேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது என்கிற ரேஞ்சில் அவர் எழுதியிருக்க உடனடியாக அவரை திருமணம் செய்வது என முடிவெடுத்தார் பார்த்திபன். ஆனால், அவர் எப்போது வீட்டில் இருப்பார்?. எந்த படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்? என எதுவுமே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அங்கு சென்று அவரை கூட்டி செல்லவும் முடியாது. அதோடு, பார்த்திபனின் திட்டமும் சீதாவுக்கு தெரியாது. முதலில் அவருக்கு தெரிவிக்க வேண்டுமே!..
இதையும் படிங்க: கேப்டனால் அறிமுகமான இயக்குனர்!.. ஓபனிங் மாஸாக இருந்தும் பிக்அப் ஆகாமல் போன காரணம் என்ன?..
எனவே, நண்பர்கள் மூலம் சீதாவின் வீட்டை நோட்டம் வீட்டிருக்கிறார் பார்த்திபன். சீதா பற்றி தகவல் தெரிந்துகொள்ள முடியவில்லை. அப்போதுதான் சீதாவின் உறவினர் இதற்கு உதவியிருக்கிறார். அவர் மூலம் ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சீதா வெளியே வரப்போகிறார் என்பது தெரியவந்திருக்கிறது. பொதுவாக நடிகைகளை கார்கள் மூலம் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து செல்வார்கள். எனவே, அப்படி 2 கார்கள் மூலம் அவரின் வீட்டின் முன்பு பார்த்திபனின் நண்பர்கள் காத்திருந்தார்கள்.
நண்பரின் வீட்டில் திருமண கோலத்தில் காத்திருந்தார் பார்த்திபன். நேரம் போய்கொண்டே இருக்கிறது. சீதாவோ வரவில்லை. 5 மணி திட்டமிட்டு 6, 7 ஆகிவிட்டது. அப்போதுதான் ‘சீதா வந்துவிட்டார்’ என ஒரு குரல் ஒலிக்கிறது. அப்போதுதான் நிம்மதியும், சந்தோஷமும் அடைந்திருக்கிறார் பார்த்திபன். சீதா வந்தவுடன் அவரின் கழுத்தில் தாலி கட்டினார் பார்த்திபன். பதட்டத்துடன் இருந்த சீதாவுக்கும் அப்போதுதான் சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறது.