நடிகர் திலகத்துக்கு நடிப்பின் மீது ஆசை வர காரணம் என்ன தெரியுமா?!. அட இது தெரியாம போச்சே!...
நடிகர் திலகம் எப்படிப்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். நாடகங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர். இவருக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. இவரின் அப்பா நாடக நடிகர் கூட கிடையாது. ஆனாலும், சிறு வயதிலேயே நாடக கம்பெனியில் சேர்ந்து கொண்டார்.
பல வருடங்கள் நாடகங்களில் பல வேஷங்கள் போட்டார். சினிமாவில் அவ்வளவு சுலபமாக சிவாஜிக்கு வாய்ப்புகள் கிடைத்துவிடவில்லை. சினிமாவில் சிவாஜி நுழைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிவாஜியின் நாடக குரு பெருமாள் முதலியார்தான்.
இதையும் படிங்க: ஹாலிவுட்டின் உல்டாவாக வந்த தமிழ் படங்கள்… எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித் யாரும் தப்பலயே!..
இவர்தான் பராசக்தி படத்தை ஏவிஎம் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்தவர். பராசக்தி படம் மூலம் சினிமா வட்டாரத்தில் பிரபலமான சிவாஜி பல படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் சிவாஜியின் நடிப்பு பயணம் அவரின் இறுதி வரை நிற்கவில்லை. சினிமாவில் சிவாஜி ஏற்காத வேடமே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
ஒருகட்டத்தில் நடிகர் திலகமாகவும் மாறினார். ஒரு கதாபாத்திரத்திற்கு சிவாஜி எப்படி உயிர் கொடுப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு நடிப்பின் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது என்பது பலருக்கும் தெரியாது. இதுபற்றி அவரே பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: அதை நினைச்சா அடிவயிற்றில் நெருப்பைப் போட்டு பிசைவது போல இருக்கு…. சிவாஜியா இப்படி சொல்வது?
என் வீட்டின் முன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை போடுவார்கள். அதை பார்க்கும்போதுதான் நாமும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. எனவே, நாடகம் கம்பெனிக்கு சென்று நான் அப்பா அம்மா இல்லாத அனாதை என்று சொல்லி சேர்ந்து கொண்டேன். அதன்பின் அதுவே என் வாழ்க்கையாக மாறியது’ என சொல்லி இருக்கிறார் நடிகர் திலகம்.
நடிகர் எம்.ஜி.ஆரும் சிவாஜியை போலவே நாடகங்களில் நடித்துவிட்டுதான் சினிமாவுக்கு போனார். ஆனால், 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபின்னரே அவர் ஹீரோவாக மாறினார். ஆனால், சிவாஜியோ முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்து வெற்றி வாகை சூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.