புத்தாண்டையொட்டி அதிரடி அறிவிப்பு… இளம் இசை அமைப்பாளரைக் களமிறக்கி மாஸ் காட்டும் சிம்பு!

by sankaran v |
str 49
X

str 49

STR 49: சிம்பு தற்போது கமல், மணிரத்னம் காம்போவுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் திரையுலக வாழ்வில் இது ஒரு மைல் கல்லாகவே அமையும். அது மட்டும் அல்லாமல் கமலுடன் இணைந்து முதன் முறையாக கைகோர்க்கிறார்.

சூட்டிங்ஸ்பாட்டில் கமலிடம் இருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளார். அதனால் படத்தில் புதிய பரிமாணத்தில் சிம்புவை நாம் பார்க்கலாம். இதுவே படத்துக்கான கூடுதல் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.

str 49 தொடர்ந்து சிம்பு தனது 49வது படம் குறித்து சமீபத்தில் அவரது பிறந்த நாளில் அறிவித்தார். பார்க்கிங் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சிம்பு தனது எக்ஸ் தளத்தில் படத்துக்கு சாய் அப்யங்கர் என்ற இளம் இசை அமைப்பாளர் இசை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். சாய் அப்யங்கர் யூடியூப்பில் பிரபலமானவர். கட்சி சேர என்ற ஒரு தனிப்பாடல் மூலம் 150க்கும் மேற்பட்ட மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை ஈர்த்தார்.

லோகேஷ் கனகராஜ் தயாரிக்க, பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் இசை அமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதே போல இப்போது இவரை சிம்புவும் இசை அமைப்பாளர் ஆக்கியது அனைவரின் பார்வையையும் சாய் அப்யங்கர் பக்கம் திருப்பியுள்ளது. இவருக்கு 21 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்பதையும் அறிவித்துள்ளார்.

Next Story