250 கோடியில் சிம்புவின் 50வது படம்… ! மணிரத்னம் படத்துக்கு மட்டும் எப்படி இவ்ளோ ஆர்வம்?

by sankaran v |   ( Updated:2025-05-07 06:30:42  )
str 50
X

str 50

STR 50: தற்போது கமல், மணிரத்னம் காம்போவுடன் இணைந்து சிம்பு தக் லைஃப் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் புரொமோஷன் வேலைகள் நடந்துகொண்டுள்ளது. ஜிங்குச்சா என்ற பாடலில் கமலுடன் இணைந்து பக்காவான ஸ்டெப்புகளுடன் டான்;ஸ் ஆடி அசத்தியுள்ளார் சிம்பு. இந்தப் படம் இவரை வேறு லெவலுக்குக் கொண்டு செல்லும்.

தொடர்ந்து எஸ்டிஆரின் 50வது படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார்.

தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் சிம்புவின் 50வது படம் வெளிவருகிறது. இந்தக் கதைக்கு ரஜினி, கமலே செட்டாக மாட்டாங்களாம். சிம்புவுக்கு அந்தக் கேரக்டர் மேல ஒரு ஆர்வம் வந்தது. சிம்புதான் செட்டாவாராம். 250 கோடி பட்ஜெட். இந்தப் படத்துக்குத் தனியா தயாரிப்பாளர் கிடைக்கலன்னாலும் சொந்தமாக அந்தப் பட்ஜெட்ல ரிஸ்க் எடுத்து தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவரோட இந்த நம்பிக்கை பெரிய அளவில் வெற்றியைத் தரும்.

சிம்பு மேல பொதுவாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அவரு எப்பவும் கரெக்டான நேரத்துக்கு சூட்டிங்குக்கு வர மாட்டாரு. சரியா படத்துல நடிச்சிக் கொடுத்து படத்துக்கு ஒத்துழைக்க மாட்டாருன்னு சொல்வாங்க. சரியா கால்ஷீட் தேதியைக் கொடுக்க மாட்டாருன்னு சொல்வாங்க. இப்;ப எல்லாத்தையும் நிறுத்திட்டாரு சிம்பு. கமல் தான் தக் லைஃப் ல ஹீரோ. ஆனா அவருக்கு ஈக்குவலா சிம்புவுக்குக் கேரக்டர் கொடுத்துருக்காங்க.

ஹரியோட இயக்கத்துல கோவில் படத்துல நடிச்சாரு. அந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாரு. ஒருநாள் கூட லேட்டா வரல. கரெக்டா சூட்டிங் போனாரு. கரெக்டா முடிச்சிக் கொடுத்தாரு. காரணம் என்னன்னா அந்த டைரக்டர் தான். அதுவும் இங்கே முக்கியம். சிம்பு சமீபத்துல என்ன சொன்னாருன்னா ஒரு டைரக்டர் எனக்கு பிடிச்சதுன்னா நல்லபடியா ஒர்க் பண்ணினா அவங்க கூட டிராவல் பண்ணுவேன்.

எனக்கு மனசுக்குப் பிடிச்ச டைரக்டரா இருக்கணும். அந்த மாதிரி ஸ்கிரிப்ட், டயலாக், என்ன சீன் எடுக்கப் போறாங்க? பேப்பர்னு எதுவுமே இல்லாம டைரக்டர் இன்னைக்கு வந்து ஸ்பாட்ல உட்கார்ந்துக்கிட்டு இப்படி எடுக்கலாமா? அப்படி எடுக்கலாமா? அதை எடுக்கலாமா? சிம்பு நீங்க வந்து நின்னு பாருங்க. இப்படி எல்லாம் டிசைட் பண்ணிட்டு எடுப்பாங்க. அதனால எனக்கு ஒரு படத்துல நடிக்க இன்வால்வ்மெண்ட் வர மாட்டேங்குது.

#image_title

பல டைரக்டர்கள் இன்னைக்கு வர்றவங்களைப் பார்த்தா அவங்களுக்கெல்லாம் என்ன எடுக்கப்போறோம்னே தெரியல. என்ன கதை? என்ன சீன் வரப்போகுது? என்ன படமாகப் போகுது? என்ன ஸ்க்ரீன்ல வரப்போகுது? எதுவுமே தெரியாம வந்து ஸ்பாட்ல உட்கார்ந்துக்கிட்டு இப்படி எடுக்கலாமா அப்படி எடுக்கலாமான்னு கேட்டா ஒரு நடிகனுக்கு சலிப்பு வரும். அது சிம்புவுக்கு வருது. அந்த வகையில் எல்லாம் பர்ஃபக்டா எடுக்குற டைரக்டர்னா அது மணிரத்னம்தான். அதனாலதான் அவருக்கு சிம்பு மரியாதையைக் கொடுக்கிறார் என்கிறார் பாலாஜி பிரபு.

Next Story