படம் பார்க்கும்போது நண்பர்னுலாம் பார்க்கமாட்டேன்… சந்தானம் நடிப்பு பற்றி சிம்பு சொன்னது இதுதான்..!

str and santhanam
Santhanam and STR: சந்தானம் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் டிடி நெக்ஸ் லெவல். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் நடிகர் சிம்பு என்ன சொல்கிறார்னு பாருங்க.
டிடி ரிட்டர்ன்ஸ், பர்ஸ்ட் பார்ட், செகண்ட் பார்ட் ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தேன். சந்தானம் நமக்குத் தெரியும். நண்பர் அதெல்லாம் மீறி பர்ஸ்ட் நான் ஒரு ரசிகன். அப்படித்தான் படம் பார்ப்பேன். அவருக்கும் எனக்கும் இருக்குற பர்சனல் பாண்ட் எல்லாம் படம் பார்க்கும்போது ஓரம் வச்சிருவேன்.
அப்படி நான் ரசிகனா படம் பார்க்கும்போது ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் கொடுக்கணும்னு ரொம்ப மெனக்கிட்டு அருமையா பண்ணிருப்பாரு. இந்தப் படத்துக்கும் டிரைலரைப் பார்க்கும்போது சந்தானத்தோட பாடி லாங்குவேஜ், டைமிங் ரொம்ப அருமையா இருக்கு.
இந்தப் படத்தை சந்தானம் டீம்ல உள்ள பிரேம் தான் டைரக்ட் பண்ணிருக்காரு. என்னோட மன்மதன் படத்தில இருந்து இந்த சந்தானம் டீமைப் பார்க்கிறேன். அன்னைக்கே இருந்து இன்னைக்கு வரைக்கும் அந்த உழைப்பு அப்படியே இருக்கு. ரெடின் கிங்ஸ்லியை எல்லாருக்கும் கோலமாவு கோகிலால இருந்துதான் தெரியும்.

எனக்கு வேட்டை மன்னன் படத்துல இருந்தே தெரியும். இவரைப் பார்த்துட்டு நெல்சன்கிட்ட சொல்வேன். இவன் பெரிய காமெடியனா வரப்போறான்னு. நெல்சன் சிரிப்பான். இன்னைக்கு பெரிய காமெடியனா வந்துருக்காரு. ரொம்ப சந்தோஷமா இருக்கு என்கிறார் சிம்பு.
நடிகர் சந்தானமும், சிம்புவும் நெருங்கிய நண்பர்கள். சிம்பு வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவரது பல படங்களில் நகைச்சுவை நாயகனாக சந்தானம் நடித்திருந்தார். பல படங்கள் இவரது காமெடிக்காகவே நல்ல வரவேற்பைப் பெற்றன. அப்போது இருந்தே இவர்கள் நல்ல நண்பர்கள். அப்படி இருக்க இப்போது சந்தானம் பல படங்களில் கதாநாயகன் ஆக நடித்து வருகிறார். அப்படி இருந்தும் தொழில் வேறு. நட்பு வேறு என்ற ரீதியில் சிம்பு சந்தானம் குறித்து பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாகவே உள்ளது.