லியோ கிளைமேக்ஸ்ல ராஜமெளலி ஹீரோவா?.. லோகேஷ் கனகராஜ் இறங்கி செய்ய ஆரம்பிச்சிட்டாரா?..

Published on: October 11, 2023
---Advertisement---

லியோ படத்தின் கிளைமேக்ஸில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு சூப்பரான கேமியோவை லோகேஷ் கனகராஜ் இறக்கி இருப்பார் என்று விக்ரம் படத்தில் சூர்யாவை ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் பார்த்த நிலையில், ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் எனும் ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் லியோ படம் என படம் ஆரம்பித்ததில் இருந்து ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. மேலும், படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் கதாபாத்திரங்கள் வரை இரண்டு படத்துக்கும் கம்பேரிசன் அடித்து இது அதுதான் என லோகேஷ் அறிவிப்பதற்கு முன்பாகவே உறுதியாக கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: போற போக்கை பார்த்தா தியேட்டர் பொழப்பும் போயிடும் போல தெரியுதே!.. போலி டிக்கெட்.. லியோ ரிலீஸுக்கு வேட்டு?..

மேலும், சில ரசிகர்கள் இந்த படத்துக்கும் எல்சியூவுக்கும் கனெக்‌ஷன் இருந்தா நல்லா இருக்கும் என நினைக்கின்றனர்.

ஆனால், இது விஜய் படம் என்பதால், மற்ற பிரபல ஹீரோக்களுக்கு ஸ்பேஸ் கொடுப்பாரா? என்பதே சந்தேகம் தான். படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும், அத்தனை பேரையும் வில்லனாக மாற்றி விட்டு தான் மட்டுமே ஹீரோவாக நடித்திருப்பார் என்று தான் தெரிகிறது.

இதையும் படிங்க: நடிக்கிறதை விட்டுட்டு இந்த தொழில் செய்யப் போறாரா வலிமை பட நடிகை?.. அவரே போட்ட போஸ்ட்டை பாருங்க!..

ஆனாலும், இது 100 சதவீத லோகேஷ் படம் என்பதால், கிளைமேக்ஸில் பவர்ஃபுல் கேமியோ இருக்க வாய்ப்புகளும் உள்ளன என்கின்றனர். இந்நிலையில், ராஜமெளலி படத்தில் ஹீரோவாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தான் லியோ படத்தில் கேமியோவாக நடித்திருக்கிறார் என்கிற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

மேலும், செய்யாறு பாலு உள்ளிட்டோரும் லியோ படத்தின் கிளைமேக்ஸில் சுமார் 90 நொடிகள் ராம்சரணின் அதிரடி என்ட்ரி இருக்கும் என உருட்டத் தொடங்கி உள்ளனர். எதுவாக இருந்தலும், இன்னும் 8 நாட்களில் உண்மை தெரியவரும்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.