அமரனுக்கு எதிராக 1.1 கோடி இழப்பீடு கேட்டு மாணவர்.. இது என்ன புது பிரச்னையா?

Published on: November 21, 2024
sivakarthikeyan_sai pallavi
---Advertisement---

Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் அடித்து இருக்கும் நிலையில் படத்திற்கு எதிராக மாணவர் ஒருவர் ரூபாய் 1.1 கோடி இழப்பீடு கேட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய திரைப்படம் அமரன். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கிய இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயன், அவர் மனைவி இந்து ரபேக்கா வர்க்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: குழந்தை இருக்கிறது பிக்பாஸ் போனப்ப தெரியலயா?!. கஸ்தூரிக்கு எதிராக பொங்கும் நெட்டிசன்கள்!…

தீபாவளி தினத்தை முன்னிட்டு அமரன் திரைப்படம் அக்டோபர் 31ந் தேதி ரிலீஸானது. போட்டியில் வெளியான படங்களில் அமரன் திரைப்படம் மற்ற படங்களை தட்டி தூக்கி வசூல் சாதனை படைத்தது. 300 கோடியை தாண்டி அமரன் திரைப்படம் வெற்றி நடை போட்டது.

முதல்முறையாக சிவகார்த்திகேயன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. தொடர்ச்சியாக படம் தற்போது வரை திரையரங்குகளில் தடங்கல் இல்லாமல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இதன் காரணமாக படத்தின் ஓடிடி வெளியிடு நாளை தள்ளி வைத்து இருக்கிறது நெட்பிளிக்ஸ். இந்நிலையில் இப்படத்திற்கு எதிராக மாணவர் ஒருவர் ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். படத்தில் சாய் பல்லவி தன்னுடைய போன் நம்பர் என சிவகார்த்திகேயனிடம் ஒரு எண்ணை கொடுப்பார்.

இதையும் படிங்க: நான் நம்பும் ஒரே நடிகர் சியான் விக்ரம்!.. அட நம்ம கமலே இப்படி சொல்லிட்டரே!…