வெறும் செட் போட்டு பிரம்மாண்டம்னு பேர் எடுத்தவர் இல்ல ஷங்கர்! அவரை பற்றி தெரியாத ஒரு விஷயம்

by Rohini |
shankar
X

shankar

Director Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பேர் போனவர் இயக்குனர் ஷங்கர். இவர் படங்களை பொறுத்தவரைக்கும் பெரிய பெரிய செட் போட்டு ஒரு பாடலை கோடிக்கணக்கில் எடுப்பது என இந்த வகையில் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்வது உண்டு. ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஷங்கர்.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியடைந்த ஷங்கர் அடுத்து காதலன், முதல்வன் என மிகப் பிரம்மாண்ட படைப்புகளை இந்த தமிழ் சினிமாவிற்கு கொடுத்து ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தார். அன்றிலிருந்து இன்று வரை ஷங்கர் படங்கள் என்றாலே ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாகவே பார்க்க தொடங்கினர்.

இதையும் படிங்க: நடிகரின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத ரஜினிகாந்த்!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருடைய பிரம்மாண்ட படைப்புகள் அரங்கேறி வருகின்றன. தற்போது கேம் சேஞ்சர் என்ற தெலுங்கு படத்தை ராம்சரனை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அதுமட்டுமல்லாமல் இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் ஒரு பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமாகும்.

இந்த நிலையில் ஷங்கருடன் 2.0 படத்தின் மூலம் முதன் முதலில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார் சில்வா. அந்த படத்தின் போது சில்வாவிடம் ஷங்கர் ஒரு காட்சிக்காக இப்படி தான் எடுக்க வேண்டும் என சொல்லிவிட்டு சென்றாராம். இவருக்கு ஷங்கருடன் முதல் படம் என்பதால் எந்த ஐடியாவும் இல்லையாம். அதனால் ஷங்கரிடம் ஏதாவது சீன் பேப்பர் இருந்தால் கொடுங்கள் என கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: இனியாவை வச்சு காய் நகர்த்தலாம் பாத்தா இப்படி பல்பா கோபி… முடிச்சிவிடுங்கப்பா!

அதற்கு ஷங்கர் சீன் பேப்பர் பார்த்தால் உங்களுக்கு ஒன்றும் புரியாது என சொல்லி இருக்கிறார். அதற்கு சில்வா சீன் பேப்பரை படிக்கக் கூட தெரியாதா? சும்மா கொடுங்கள் என மனதில் நினைத்துக் கொண்டு அதை வாங்கி வீட்டில் போய் பார்த்தாராம். ஒரு காட்சிக்கு 483 ஷாட் வைத்திருந்தாராம் ஷங்கர். எந்தெந்தில் ஆங்கிளுக்கு என்னென்ன ஷாட் வைக்க வேண்டும் என அனைத்தையும் பக்கவாக பிளான் செய்து ரெடி பண்ணி வைத்திருந்தாராம். இதை பார்த்ததும் சில்வாவுக்கு ஒரே ஆச்சரியமாம். இந்த மனுஷன் இந்த அளவுக்கு ஹோம் ஒர்க் செய்து தான் படத்தை எடுக்கிறாரா என நினைத்து மிகவும் பிரமித்து போனாராம்.

Next Story