‘விடாமுயற்சி’யை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்! லண்டனில் இருந்து வேகமெடுக்கும் சுபாஸ்கரன்
ரஜினி தனது ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்று நேற்றுதான் சென்னை திரும்பியிருக்கிறார். அவர் வருவதை அறிந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் சூழ்ந்து கொண்டனர். அவரிடம் ஜெய்லர் பட வெற்றியை பற்றி பல கேள்விகளை முன்வைத்தனர்.
எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் சொன்னார் ரஜினி. மேலும் நெல்சனுக்கும் அனிருத்துக்கும் மிக்க நன்றி எனவும் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றும் கூறினார். இமயமலையில் இருந்து வந்ததும் நேரிடையாக தன்னுடைய 170வது படத்தில் இணைகிறார் ரஜினி.
இதையும் படிங்க : வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா
த.ச.ஞானவேல் இயக்கத்தில் அடுத்தப் படத்தில் இணையும் ரஜினி இந்தப் படத்திற்கான பூஜையிலும் கலந்து கொள்ள இருக்கிறாராம். ரஜினி 170 படத்திற்கான பூஜை லீலா பேலஸில் வரும் 26 ஆம் தேதி நடக்க இருக்கிறதாம்.
அதே பேலஸில் அதற்கு முந்தைய நாள் சந்திரமுகி 2 படத்திற்கான நிகழ்ச்சியும் நடத்தப்பட இருக்கிறதாம். இதில் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் லண்டனில் இருந்து வர இருக்கிறாராம். சந்திரமுகி 2 படம் மற்றும் ரஜினி 170 போன்ற படங்களை லைக்காவே தயாரிப்பதால் அவரும் வருகிறாராம்.
மேலும் வந்த கையோடு விடாமுயற்சியில் என்னதான் பிரச்சினை என்பதையும் ஆராய்ந்து அதற்கான வேலைகளையும் துரிதப்படுத்தப் போகிறார் சுபாஸ்கரன் என்று கோடம்பாக்கத்தில் இருந்து சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
இதையும் படிங்க : வெறும் காபி.. 100 ரூபாயை மட்டும் கொடுத்து 7 பாட்டை வாங்கிய இயக்குனர்… பிரசாந்த் படத்தின் சுவாரஸ்ய பின்னணி!
ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பதை போல் ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கான வேலைகளையும் முடித்து விட்டுதான் மீண்டும் லண்டன் திரும்புவார் சுபாஸ்கரன் என்று சொல்லப்படுகிறது.