Connect with us
kamal

Cinema News

ரஜினி-கமலை ரீ கிரியேட் பண்ணி எடுத்தப் படம்தான் அது! 15 வருட சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகர்

தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத தூண்களாக இருப்பவர்கள்  நடிகர்கள் ரஜினி மற்றும் கமல். ரஜினிக்கு முன்னாடியே கமல் ஒரு ஸ்டாராக தமிழ் சினிமாவை அலங்கரித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவதரித்தார் ரஜினி. கமலின் வளர்ச்சியை பார்த்த ரஜினி இப்படி ஒரு மனுஷன் இருக்கும் போது நம்மால் ஜெயிக்க முடியுமா? என்றும் யோசித்திருக்கிறாராம்.

இருந்தாலும் ஒரு துணை நடிகராக, வில்லனாக பல படங்களில் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து ஒரு கட்டத்தில் இருவருமே சேர்ந்து கிட்டத்தட்ட 13 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதில் பெரும்பாலும் கமலுக்கு வில்லனாகவே ரஜினி நடித்திருப்பார். அந்த காலங்களில் அவர்களின் காஸ்டியூம்ஸே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

இதையும் படிங்க : வெறும் 20 நாள் நடிப்பதற்கு இத்தனை கோடியா?!.. விஜய்சேதுபதி காட்டுல கொட்டுது பண மழை!…

மேலும் ஹேர் ஸ்டைலும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். நடக்கும் நடையிலிருந்து பேசும் விதம் வரைக்கும் அந்த காலத்தில் கொஞ்சம் ரசிக்கும் படியாக இருக்கும். 13 படங்களில் சேர்ந்து நடித்தவர்களை இனிமேல் ஒன்றாக திரையில் பார்க்க முடியாத என்று பல ரசிகர்கள் தவம் கிடந்தனர்.

kamal1

kamal1

ஆனால் அது முடியாத பட்சத்தில் தான் அவர்களை ரீ கிரியேட் செய்து ஒரு படத்தை எடுத்திருக்கின்றனர். 15 வருடங்களை கடந்தும் கடந்தும் நேற்று ரீ ரிலீஸ் ஆகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சுப்ரமணியபுரம் படம் தான் அது.

இதையும் படிங்க : அஜித்தின் ‘v’ செண்டிமெண்டுக்கு இவர்தான் காரணமா? விடாமுயற்சி மட்டும் ஏன் டேக் ஆஃப் ஆகல? ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்

சசிக்குமார் முதன் முதலில் இயக்கிய படம். படம் வெளியாகி அந்த நேரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம். நேற்று பேட்டியில் சசிகுமார் ரனியையும் கமலையும் ரீ கிரியேட் செய்து எடுத்தப் படம் அது என்றும் அவர்கள் நடித்தால் இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட படம் என்றும் கூறினார்.

இதில் சசிகுமார் ரஜினியாகவும் ஜெய் கமலாகவும் சித்தரித்து எடுத்தாராம். ஆரம்பகாலத்தில் ரஜினி பெரும்பாலும் கட்டம் போட்ட சட்டைதான் அணிவாராம். அதே போல் தான் சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் கட்டம் போட்ட சட்டைதான் அணிந்திருப்பார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top