வெறும் 20 நாள் நடிப்பதற்கு இத்தனை கோடியா?!.. விஜய்சேதுபதி காட்டுல கொட்டுது பண மழை!...

Actor vijay sethupathi : சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சூதுகவ்வும் போன்ற வித்தியாசமான கதைகளில், வித்தியாசமான வேடங்களில் நடித்து ஆச்சர்யப்பட வைத்தார்.

வழக்கமாக தமிழ் சினிமா ஹீரோக்கள் செய்வது போல் ஹீரோயின், 4 டூயட் பாடல், 4 சண்டை, ஓப்பனிங் பாடல் என எதையும் செய்யாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பலருக்கும் பிடித்தமான நடிகராக மாறியவர் இவர். பல படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். சமீபகாலமாக வில்லனாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதையும் படிங்க: கவுதம் மேனனின் புதிய படத்தில் ஹீரோ அவரா?… ஒரே மாமன்னனுக்கே இவ்வளவு அக்கப்போரு!..

அதற்கு காரணமும் இருக்கிறது. ஹீரோவாக நடித்தால் அதிகநாட்கள் கால்ஷீட் கொடுக்கவேண்டும். சம்பளம் ரூ.15 கோடி வரை கிடைக்கும். ஆனால், படம் ஃபிளாப் ஆனால் விஜய்சேதுபதியின் மார்க்கெட்டை அது காலி செய்யும். ஆனால், வில்லனாக நடித்தால் குறைவான நாட்கள நடித்தால் போதும். மேலும் ரூ.10 கோடி வரை சம்பளமும் வாங்கி கொள்கிறார். படம் ஃபிளாப் ஆனாலும் இவரை உருட்ட மாட்டார்கள்.

விஜயுடன் மாஸ்டர், கமலுடன் விக்ரம், ஷாருக்கானுடன் ஜவான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு நெருக்கமான சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். அதில் காக்கா முட்டை மணிகண்டனும் ஒருவர். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர்.

இதையும் படிங்க: அன் லிமிட்டேட் சைஸ் அள்ளுது!.. யாஷிகாவை ஜூம் பண்ணிப் பாத்து மூடேத்தும் புள்ளிங்கோ..

அடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த ஆண்டவன் கட்டளை படத்தை இயக்கியிருந்தார். அதன்பின், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த கடைசி விவசாயி படத்தை இயக்கினார். இப்போது ஒரு வெப் சீரியஸை இயக்க திட்டமிட்டுள்ளார். இதிலும் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்திற்கு விஜய் சேதுபதிக்கு சம்பளமாக ரூ.20 கோடி பேசப்பட்டுள்ளது. இத்தனைக்கும் மிகவும் குறைவான நாட்கள்தான் விஜய்சேதுபதி கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படத்தை பிரபல ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அதனால்தான் விஜய்சேதுபதி இவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

எப்படியே விஜய் சேதுபதி காட்டில் அடை மழைதான்!...

இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’யை டம்மி பீஸாக மாற்றிய ரஜினி! செம ஃபார்முலதான் இருக்காரு – பருந்துனா சும்மாவா?

 

Related Articles

Next Story