இந்தப் பெயரில் ஆரம்பித்த நடிகைகள் எப்பவுமே சூப்பர்ஹிட் தான்...யாருன்னு பார்க்கலாமா..!
இந்த எழுத்தில் பெயர் ஆரம்பித்தாலே படம் ஹிட் என்ற நியூமராலஜியில் சில தயாரிப்பளார்கள், இயக்குனர்கள் படத்திற்கு பெயர் வைப்பார்கள்.
நடிகர், நடிகைகளும் தங்கள் பெயரை இப்படி மாற்றிக் கொள்வதுண்டு. ஆனால் இந்த பெயரில் தொடங்கிய நடிகைகள் எல்லாமே வெற்றி பெறுகிறார்கள். அந்தப் பெயர் வரிசை கொண்ட நாயகிகளின் பட்டியலைப் பார்ப்போம்.
பிரியா பவானி சங்கர்
இவரது இயற்பெயர் சத்யபிரியா பவானி சங்கர். புதிய தலைமுறை டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். தொடர்ந்து எம்பிஏ படிப்பை முடித்தார். காதல் முதல் கல்யாணம் வரை என்ற விஜய் டிவி தொடரில் நடித்துள்ளார். 2017ல் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அமேசான் பிரைமில் டைம் என்ன பாஸ் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மாயி, ஹாஸ்டல், ருத்ரன், இந்தியன் 2, பத்து தல ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியாமணி
பிரியா வாசுதேவ் மணி என்பது இவரது முழுப் பெயர். தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் நடித்துள்ளார். 2003ல் எவரே அடகாடு என்ற தெலுங்கு படத்தில் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
சத்யம் என்ற தமிழ்ப்படத்தில் 2004ல் அறிமுகமானார். ஆனால் 2006ல் வெளியான பருத்தி வீரன் தான் இவருக்கு மெகா ஹிட்டானது. இதில் முத்தழகு வேடத்தில் சக்கை போடு போட்டு இருந்தார்.
பிரியங்கா சோப்ரா
ஜார்க்கண்டைச் சேர்ந்த அழகியான இவர் மாடலிங்கில் பணிபுரிந்துள்ளார். இவர் நடிகை மட்டுமல்லாமல் முன்னாள் உலக அழகியாகவும் பிரபலமானவர். ஆம். 2000ல் இவர் உலக அழகி பட்டம் பெற்றார். 2002ல் தளபதி விஜய் உடன் தமிழன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
2008ல் இந்தியில் இவர் நடிப்பில் வெளியான பேஷன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே ஆண்டில் தான் லவ் ஸ்டோரி 2050 என்ற இந்திப்படத்தில் இரட்டை வேடம் போட்டு அசத்தினார். 2009ல் இவர் நடித்த காமினி படம் சூப்பர் ஹிட்டானது.
பிரியா ஆனந்த்
பிரியா பரத்வாஜ் ஆனந்த் என்பது இவரது முழுப்பெயர். தமிழ் படங்களில் அதிகளவில் நடித்துள்ளார். 2009ல் வாமணன், இங்கிலீஷ் விங்கிலீஷ் படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் வணக்கம் சென்னை, அரிமா நம்பி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். இவரது அழகை சொல்லிக்கொண்டே இருக்கலாம். அதற்கெல்லாம் நேரம் போதாது. அவ்ளோ அழகு. சிரிப்பும் அழகு...சிகையும் அழகு...சிலை வடிவ முகமும் அழகு...!
பத்மபிரியா
நடிகை, பிரபல மாடல், பரதநாட்டியம் என பல திறமைகளைக் கொண்டவர். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
2003ல் சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 2004ல் காழ்சா என்ற மலையாளப்படத்தில் அறிமுகமானார். 2005ல் தவமாய் தவமிருந்து என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானார். எல்லாமே ஹிட் தான்.