பல நடிகைகளுக்கு தொல்லை!.. அம்மா நடிகைகளை கூட விட்டு வைக்கமாட்டாரு?!.. மீண்டும் சுசித்ரா!...

#image_title
நடிகர் தனுஷ் பல நடிகைகளுக்கு தொல்லை கொடுத்து இருக்கின்றார் என்று பாடகி சுசித்ரா ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வரும் இவர் நேற்று திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் தனுஷ் குறித்து காட்டமாக விமர்சித்து இருந்தார். நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் என்கின்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: நயன்தாரா விவகாரம் பற்றி எரியுற நேரத்துல தனுஷ் பாங்காக் போயிருக்காராமே… ஏன்னு தெரியுமா?
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை, மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் தொடர்பான வீடியோவை ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள். இந்த டாக்குமெண்டரியை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கின்றார்.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இந்த டாக்குமென்டரி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் ஆகவில்லை. நாளை நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆவணப்படம் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் இந்த டாக்குமெண்டரியை ரிலீஸ் செய்வதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை நடிகை நயன்தாரா தனது ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருக்கின்றார்.
இதற்கு நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் 10 கோடி நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றார். இதை பார்த்து ஆத்திரமடைந்த நயன்தாரா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையானது நேற்று முதலே சமூக வலைதள பக்கங்களில் தீயாய் பரவி வருகின்றது. பலரும் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல பாடகியான சுசித்ரா நயன்தாராவின் இந்த அறிக்கை குறித்து யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: 'தனுஷால் நடிகை நயன்தாரா பல கஷ்டங்களை சந்தித்து இருக்கின்றார். கடந்த இரண்டு வருடங்களாக நயன்தாராவை தனுஷ் டார்ச்சர் செய்து வந்திருக்கின்றார். நயன்தாராக்கு இப்போது சப்போர்ட் செய்யும் பல நடிகைகளுக்கு தனுஷ் தொல்லை கொடுத்து இருக்கின்றார்.

dhanush nayanthara
தனுசுடன் நடித்த பெரும்பாலான நடிகைகள் நயன்தாராவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அப்படி என்றால் தனுஷ் மீது அவர்கள் எந்த அளவுக்கு கோவத்தில் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் தனுஷ் தனது திரைப்படங்களில் நடித்த எந்த நடிகையும் விட்டு வைத்ததில்லை. ஏன் அம்மா நடிகைகளுக்கு கூட அவர் தொல்லை கொடுத்திருக்கின்றார்.
பாலியல் ரீதியாக தொல்லை செய்ய முடியவில்லை என்றால் தொழில் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுப்பார். அப்படியில்லை என்றால் அவரின் இமேஜினை டேமேஜ் செய்யும்படி, பர்சனல் ரீதியாகவும் தொல்லை கொடுப்பார். மேலும் படபிடிப்பு தளங்களில் மோசமான கேரவன்கள் கொடுப்பது, அவர்களை கீழ்த்தரமாக நடத்துவது போன்ற செயல்களை எல்லாம் செய்யக் கூடியவர் நடிகர் தனுஷ்.
இதையும் படிங்க: சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வச்சாச்சு! கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்.. எப்போ தெரியுமா?
அவர் ஒரு சைக்கோ என்பதால் நடிகைகளுக்கு பல வகையில் தொல்லை கொடுக்கக் கூடியவர் என்று பகிர்ந்து இருக்கின்றார். நடிகை சுசித்ராவுக்கும் தனுஷுக்கும் ஏற்கனவே பல பிரச்சனை இருந்து வந்துள்ளது. தற்போது நயன்தாரா தனுஷ் மீது காட்டமாக பதிவிட்டு இருந்த நிலையில் இதுதான் சந்தர்ப்பம் என்று மீண்டும் தனுஷ் குறித்து சர்ச்சையான விஷயங்களை பகிர்ந்து வருகின்றார் பாடகி சுசித்ரா.