Connect with us
mgr

Cinema History

என் மனைவியை யாரும் தொட்டு நடிக்க கூடாது! எம்ஜிஆர் படத்திற்கே உத்தரவா? நடிகையின் கணவனால் ஏற்பட்ட சலசலப்பு

தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமாவிலும் சரி பொது வாழ்விலும் சரி எம்ஜிஆரால் பலனடைந்தவர்கள் எத்தனை எத்தனையோ பேர். உதவிக்கரம் நீட்டும் எவரும் வெறுங்கையோடு போனதில்லை. வாரி வழங்கும் கொடை வள்ளலாகவே வாழ்ந்திருக்கிறார் எம்ஜிஆர்.

mgr1

mgr1

இந்த பழக்கங்கள் முக்கால் வாசி அவர் குருவாக ஏற்ற என்.எஸ்.கிருஷ்ணனிடம் இருந்தே வந்தது என்று சொல்லலாம். எம்ஜிஆரை முதன் முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய பெருமை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனர் சோமுவையே சேரும். அவரின் தயாரிப்பில் 1948 ஆம் ஆண்டு ஒரு பிரம்மாண்ட படைப்பு ஒன்று தயாரானது.

இதையும் படிங்க : முத்துராமன் சாவுக்கு காரணமான அந்த ஒரு விஷயம்! பிரபலம் சொன்ன பகீர் தகவல்

அதுதான் அபிமன்யு திரைப்படம். இந்தப் படத்தில் அபிமன்யுவாக எஸ்.எம்.குமரேசன் என்ற நடிகர் நடித்திருந்தார். அவரின் மனைவியான வத்சலா கதாபாத்திரத்தில் யூ.ஆர்.ஜீவரத்தினம்  நடித்திருந்தார். மேலும் அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தார்.

mgr2

mgr2

ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் டி.எஸ்.வெங்கடசாமி என்ற இளைஞராம். அவருக்கும் அபிமன்யு படத்தில் ஹீரோயினாக நடித்த யூ.ஆர்.ஜீவரத்தினத்திற்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் யாருக்கும் தெரியாமல் பழனியில் போய் திருமணம் செய்து கொண்டார்களாம்.

இதையும் படிங்க : மகனுடன் நீச்சல் உடையில்.. ரஜினிகாந்த் பட நடிகை வெளியிட்ட ஹாலிடே புகைப்படங்கள்.. ஆடிப்போன ரசிகர்கள்!

இந்த திருமணம் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனர் சோமுவை மிகவும் பாதித்திருக்கிறது. மேலும் இதனால் படத்திற்கு ஏதாவது பின் விளைவுகள் ஏற்படுமா என்றும் பயந்திருக்கின்றனர். இருந்தாலும் யூ.ஆர். ஜீவரத்தினம் திருமணத்திற்கு பிறகும் அந்தப் படத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.

mgr3

u.r.jeevarathinam

திருமணம் ஆனதில் இருந்து படப்பிடிப்பிற்கு ஜீவரத்தினத்தோடு அவரது காதல் கணவரான வெங்கடசாமியும் ஆஜராகி விடுவாராம். அபிமன்யூ படத்தில் ஜீவரத்தினத்திற்கும் படத்தின் ஹீரோவான குமரேசனுக்கும் ஏதாவது நெருக்கமான காட்சிகள் இருந்தால் இயக்குனர் கட் சொல்வதற்கு முன்பாகவே வெங்கடசாமி கட் கட் என சொல்லிவிடுவாராம். இதனாலேயே ஜீவரத்தினத்திற்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கியதாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top