Categories: latest news

சூர்யா இல்லைனா விக்ரம்! சுதாகொங்கரா போடும் புது திட்டம்.. ‘புறநானூறு’ எல்லாம் பழசுப்பா

Actor Vikram: தமிழ் சினிமாவில் விக்ரம் ஒரு மாபெரும் உச்ச நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது அவரின் நடிப்பில் தங்கலான் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். இதுவரை இல்லாத அளவில் இந்த படத்திற்காக விக்ரம் தன்னை மிகவும் வருத்தி வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார்.

இந்த படம் ஆஸ்கார் வரை செல்லும் என்ற அளவிற்கு பேசப்பட்டு வருகிறது. அடுத்ததாக வீர தீர சூரன் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க படத்தின் படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விக்ரமின் அடுத்த கட்ட ப்ராஜெக்ட் பற்றிய ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: பேராசைப்பட்டு 30 கோடி போச்சே!.. புலம்பும் கோட் பட தயாரிப்பாளர்!.. இதெல்லாம் தேவையா?!..

விக்ரமை வைத்து சுதா கொங்கரா ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார் என்ற ஒரு புதிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே சுதா கொங்கரா சூர்யா ஆகியோர் கூட்டணியில் புறநானூறு என்ற திரைப்படம் தயாராக போவதாக ஒரு செய்தி வெளிவந்தது. ஆனால் அந்தப் படம் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சூர்யா இந்த படத்தின் கதை சரியில்லை என்றும் அவருக்கு பிடித்தமான ஒரு நாவலை சுதா கொங்கராவிடம் கொடுத்து இந்த நாவல் மிகவும் நன்றாக இருக்கிறது இதை வேண்டுமென்றால் படித்து பாருங்கள். இதை படமாக்கலாம் என்று சொன்னதாகவும் தெரிகிறது. ஆனால் சூர்யா கொடுத்த அந்த நாவல் சுதா கொங்கராவுக்கு திருப்திகரமாகவில்லை என்பதால் இந்த படம் ஒரு வேளை டிராப் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: அந்த இயக்குனர் எனக்கே விபூதி அடிச்சாரு… அதுக்கூட தெரியாம உட்கார்ந்து இருக்கேன்… சுந்தர்.சி சொன்ன பகீர் தகவல்

இதற்கிடையில் சுதா கொங்கராவை ஒரு பக்கம் விக்ரமும் இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும் டார்கெட் செய்து அவருடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் சுதா கொங்கரா விக்ரமை செலக்ட் செய்து இருப்பதாக தெரிகிறது. கூடிய சீக்கிரம் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohini

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

24 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago