பேராசைப்பட்டு 30 கோடி போச்சே!.. புலம்பும் கோட் பட தயாரிப்பாளர்!.. இதெல்லாம் தேவையா?!..

விஜய் இப்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். மேலும், சினேகா, மினாக்‌ஷி சவுத்ரி, பிரபு தேவா என பலரும் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.

ஆனால், இது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு, ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜயை 20 வயது இளைஞராகவும் வெங்கட்பிரபு காட்டவிருக்கிறார்.

இதையும் படிங்க: சன் பிக்சர்ஸ் போட்ட 2 கண்டிஷன்!… கடுப்பான அஜித்!.. கலாநிதிமாறனுக்கு அல்வாதான்!..

அரசியலுக்கு வருவதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்த படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கன்னடத்தில் கேஜிஎப் ஹீரோ யாஷ் நடித்து வரும் டாக்சிக் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரடெக்‌ஷன் நிறுவனமே விஜயின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருபக்கம், கோட் படத்தின் வியாபாரங்கள் சூடு பிடித்திருக்கிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. ரூ.110 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விலை போயிருக்கிறது. லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.125 கோடிக்கு வாங்கியது. தொலைகாட்சி உரிமை சன் பிக்சர்ஸ் வாங்கி கொண்டது.

இதையும் படிங்க: ஒரு பாடலில் பணிபுரிந்த நால்வருக்கும் டைவர்ஸ்… சூப்பர்ஹிட் பாட்டின் ஃபீல் பண்ண வைக்கும் ஒற்றுமை?!

லியோ 125 கோடி என்பதால் கோட் படத்திற்கு டிஜிட்டல் உரிமை ரூ.150 கோடி என விலையை நிர்ணயித்தது ஏஜிஎஸ் நிறுவனம். இப்படத்தை வாங்க நினைத்த அமேசான் நிறுவனம் 140 கோடிக்கு கேட்டிருக்கிறது. ஆனால், அதெல்லாம் முடியாது என சொல்லிவிட்டது ஏஜிஎஸ் நிறுவனம்.

ஆனால், நெட்பிளிக்ஸ் 110 கோடிக்கு மட்டுமே கேட்டதால் அதிர்ந்து போன ஏஜிஎஸ் மீண்டும் அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொள்ள அந்நிறுவனம் கடையை சாத்திவிட்டது. தற்போது வேறு வழியில்லாமல் கோட் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.110 கோடிக்கு கொடுத்திருக்கிறது ஏஜிஎஸ். அமேசான் கேட்ட போதே கொடுத்திருந்தால் 30 கோடி சேர்த்து கிடைத்திருக்கும் என புலம்பி வருகிறது ஏஜிஎஸ்.

 

Related Articles

Next Story