ஒரு பாடலில் பணிபுரிந்த நால்வருக்கும் டைவர்ஸ்... சூப்பர்ஹிட் பாட்டின் ஃபீல் பண்ண வைக்கும் ஒற்றுமை?!

South indian Divorce: தமிழ் சினிமாவின் தற்போதைய தலைப்பு செய்தியே விவகாரத்து தான். மாதா மாதம் ஒவ்வொரு பிரபல நடிகர்களும் தங்களுடைய டைவர்ஸ் செய்தியை சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கின்றனர். அந்த லிஸ்ட்டில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து இருக்கின்றனர்.

பொதுவாக தமிழ் சினிமாவில் சமீபத்திய நாட்களாகவே முன்னணி பிரபலங்கள் தங்கள் திருமண பந்தத்தினை தொடர்ந்து முறித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தன்னுடைய பள்ளி காதலியும், மனைவியுமான சைந்தவியை பிரிவதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: இரண்டு ரசிகர்கள் எழுதிய கடிதம்!.. சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் வந்தது இப்படித்தான்!..

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கும் நிலையில் ஒரு ஆச்சரியமான தகவலையும் இணையத்தில் பரப்பி வருகின்றனர். அது சூப்பர்ஹிட் படமான மயக்கம் என்ன படத்தில் வெளியான பிறை தேடும் பாடலில் பணிபுரிந்த எல்லாருக்கும் டைவர்ஸ் ஆகி இருப்பது தான் அந்த தகவல். இப்படத்தினை இயக்கியவர் செல்வராகவன். இவர் தன்னுடைய முதல் மனைவியும், நடிகையுமான சோனியா அகர்வாலை டைவர்ஸ் செய்தார்.

ஆனால் தற்போது இரண்டாவதாக கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். அடுத்து இப்பாட்டுக்கு வரி எழுதியது நடிகர் தனுஷ். அவர் தன் மனைவியை இரண்டு வருடங்களுக்கு முன்னரே பிரிந்த நிலையில் சமீபத்தில் முறையாக விவகாரத்து கோரி மனு அளித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இப்பாடலை பாடியது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி.

இதையும் படிங்க: டைரக்டர் பிரச்னையே முடிஞ்சிதானு தெரியலை… தயாரிப்பாளரும் பிரச்னையா? தளபதி69ல் என்ன தான் நடக்குது?

அவர்கள் கதை தான் தற்போது கோலிவுட்டின் ஹைலைட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. இதில் படத்தின் நாயகி மட்டுமே ரிச்சா கங்கோபாத்யாவிற்கு 2021ம் ஆண்டு தான் தன்னுடைய கல்லூரி தோழருடன் திருமணம் முடிந்து இருக்கிறது. அவராச்சும் ஒழுங்கா இருக்கணும் என ரசிகர்கள் இந்த சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story