சுதா கொங்காராவின் அடுத்த பயோபிக்... இந்தமுறையும் ஒரு சூப்பர் தொழிலதிபர் கதை தானாம்... ஹீரோ யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முக்கிய பெண் இயக்குனரான சுதா கொங்காரா தனது அடுத்த படமாக ஒரு பயோபிக்கை தான் எடுக்க இருக்கிறார் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
திரைக்கதை ஆசிரியராக தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமானவர் சுதா கொங்காரா. இவர் துணை இயக்குநராக ஏழு ஆண்டுகள் மணிரத்தினத்திடம் பணியாற்றியவர். இவர் முதன் முதலில் இயக்கிய தமிழ்த் திரைப்படம் துரோகி. இதன் பிறகு இவர் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு இயக்கிய இறுதிச்சுற்று படம். அப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் ரீச்சை இவருக்கு கொடுத்தது.
தொடர்ந்து, சூர்யாவை வைத்து சுரரை போற்று படத்தினை இயக்கி இருந்தார். 2020 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சூர்யா தயாரித்து நடித்த இத்திரைப்படம் எ டெக்கான் ஒடிஸி என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட சிம்ப்லி டெக்கான் நிறுவனர் மற்றும் தொழில்முனைவோர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படம் சமீபத்தில் தான் தேசிய விருதை கூட வென்றது.
இந்நிலையில், சுதா கொங்காரா இயக்கும் அடுத்த படத்தில் ரத்தன் டாட்டாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்க இருக்கிறாராம். இப்படத்தில் டாடா வேடத்தில் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. முதற்கட்ட பணிகள் முடிந்த பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.