Connect with us

Cinema News

அட்லீஸ்ட் ஒரு சூர்யா!.. கழுத குடிசையா இருந்தாலும் பரவால்ல.. சுதா கொங்கராவுக்கு இந்த நிலைமையா?..

விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான துரோகி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. முதல் படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்த நிலையில், அடுத்த படத்தை வெளியிட சுமார் 6 ஆண்டுகள் ஆகிவிட்டன.

மாதவன் மற்றும் ரித்திகா சிங்கை வைத்து இறுதிச்சுற்று படத்தை 2016-ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டிருந்தார் சுதா கொங்கரா. அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தெலுங்கு மற்றும் இந்தியிலும் அதே படம் வெளியானது.

இதையும் படிங்க: உனக்கு எப்பவுமே 18 தான் ஸ்ரேயா!.. 41 வயசுன்னு சொன்னா யாரு நம்புவா!.. கவர்ச்சி சும்மா தூக்குது!..

2020 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் தான் வெளியானது. அதே படத்தை பாலிவுட்டில் அக்ஷய் குமாரை வைத்து சர்ஃபிரா எனும் தலைப்பில் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், இன்னமும் ரிலீஸ் தேதியை சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவிக்கவில்லை.

மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால் அதன் பின்னர் அந்த படம் வெளியாக காலதாமதம் ஆகும் என நடிகர் சூர்யா தெரிவித்த நிலையில், வாடிவாசல் படத்தைப் போல அந்த படம் டிராப்பா என கேள்விகள் எழுந்தன.

இதையும் படிங்க: 20 கோடி வசூல்!.. கில்லி பட இயக்குனர் தரணியை சந்தோஷப்படுத்திய தளபதி விஜய்!.. வேறலெவல் சம்பவம்!..

இந்நிலையில் தற்போது, அடுத்ததாக சுதா கொங்கரா துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தின் நடித்து வரும் துருவ விக்ரம் அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போகிறார் எனக் கூறுகின்றனர்.

சுதா கொங்கரா நிலைமை இப்படி மோசமாகி விட்டதே என்றும் முன்னணி நடிகர்கள் யாரும் அவருக்கு கால்ஷீட் தரவில்லையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். துருவ் விக்ரமுக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய படமாக மாறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

இதையும் படிங்க: சினிமாவுக்கு எண்ட் கார்டு போடாதீங்க!.. பெரிய மாலை போட்டு விஜய்யிடம் கோரிக்கை வைத்த பிரபலம்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top