ரஜினி பட டிக்கெட்டுக்காக அடி வாங்கினேன்.! சுதா கொங்காராவுக்கு சூப்பர் ஸ்டார் மேல அவ்வளவு வெறியா..!

by Manikandan |   ( Updated:2022-04-11 21:26:33  )
ரஜினி பட டிக்கெட்டுக்காக அடி வாங்கினேன்.! சுதா கொங்காராவுக்கு சூப்பர் ஸ்டார் மேல அவ்வளவு வெறியா..!
X

தற்போதுள்ள பல ஜாம்பவான் இயக்குனர்கள் அவர்கள் சினிமாவுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனாக தான் இருந்திருப்பார்கள் அவர்கள் படம் பார்த்து அதனால், தூண்டப்பட்டு சினிமாவை தேடி வந்திருப்பர். அதில் பலரது பெயர்களை நாம் குறிப்பிடடலாம்.

அப்படி, தனது 'ரசிகை மொமெண்ட்'-ஐ சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்காரா அண்மையில் ஒரு பேட்டியில் விளக்கினார். அப்போது கூறுகையில், ' எனக்கு ரஜினி படம் என்றால் மிகவும் பிடிக்கும். நான் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன்.'

எப்போதும் பெரும்பாலான படங்களுக்கு பிரிவியூ ஷோ டிக்கெட் (ரிலீசுக்கு முன்பு சினிமா பிரபலங்களுக்கு ஒரு காட்சி போட்டுக்காட்டவர்கள் ) மணிரத்னம் ஆபிசுக்கு வந்துவிடும். அப்படித்தான் பாபா படத்தின் பிரிவியூ காட்சி டிக்கெட் வந்துவிட்டது.

அப்போது என்னுடன் வேலை பார்த்து வந்த மிலன் ஏற்கனவே படத்திற்கு டிக்கெட் புக் செய்து வைத்துவிட்டான். இருந்தாலும் இந்த டிக்கெட்டை அவன் எடுத்துவிட்டான். அவனுடன் சண்டை போட்டு, அந்த டிக்கெட்டை வாங்கினேன். சண்டை என்றால் அது அடிதடி சண்டை தான். இதெல்லாம் மணிரத்னம் சார் அலுவலகத்தில் நடக்கிறது.

இதையும் படியுங்களேன் - இப்படி ஒரு கேவலமான படத்தை எடுத்துருக்கவே கூடாது.! விஜய் பட இயக்குனர் குமுறல்.!

இதனை மணிரத்னம் பார்த்துவிட்டார். அவரிடம் நான் புகார் செய்கிறேன். அவர் தலையில் அடித்துக்கொண்டு பிறகு கிளம்பினார். ' என தன்னுடைய ரஜினி ரசிகை மொமெண்ட்டை புத்துணர்ச்சியுடன் தான் ஒரு வெற்றிப்பட இயக்குனர் என்று கூட பாராமல் இயக்குனர் சுதா கொங்கரா வெளிப்படுத்தினார்.

Next Story