Connect with us

Cinema News

சிவாவை நம்பினா வேலைக்கே ஆகாது… அந்த ஸ்டாருக்கு கொக்கி போட்ட சுதா கொங்கரா!

Sivakarthikeyan: சினிமாவில் பிரபல பெண் இயக்குனராக வெற்றி கொண்டவர் சுதா கொங்கரா. இவர் தற்போது கோலிவுட் பிரபல நடிகர் ஒருவருடன் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

சுதா கொங்கரா

2013 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கி அறிமுகமானவர் சுதா கொங்கரா. முதல் படமே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற ரசிகர்களிடம் இவருக்கு புகழ் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்தார்.

இதையும் படிங்க: அந்த மேக்கப் கிட் 2 லட்சம் இருக்கும்.. ஃப்ரீயா கொடுத்த கமல்! யாருக்கு தெரியுமா?

உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கிய திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவு வெற்றிப்படமாக அமைந்தது. ஹாலிவூட் வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கார் நாமினேஷன் வரை சென்று திரும்பியது.

முறிந்த சூர்யா சுதா கொங்கரா கூட்டணி

இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக புறநானூறு பட அறிவிப்பில் வெளியிட்டனர். ஆனால் நடிகர் சூர்யா பாலிவுட் கவனம் செலுத்தி வருவதால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. இதே படத்தை தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா இயக்க இருக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ஹீரோவாக எஸ் கே, வில்லனாக ஜெயம் ரவி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தற்போது சுதா கொங்கரா நடிகர் சிலம்பரசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

இதையும் படிங்க: கோபத்தில் கத்திய சுதாகொங்கரா!.. கடுப்பாகி வெளியேறிய எஸ்.கே!.. சிக்கலில் புறநானூறு!…

சிம்புவுடன் புதிய படம்

இப்படங்களை முடித்துக் கொண்டு சுதா கொங்கரா உடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது தற்போது தமிழ் சினிமாவில் அதிகளவில் படங்களை தயாரித்து வரும் டவுன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

simbu

simbu

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தையும், தனுஷின் இட்லி கடை, அதர்வா நடிப்பில் ஒரு படம்,  விஜய் சேதுபதி நடிப்பில் 96 இரண்டாம் பாகம், தனுஷ் நடிப்பில் மற்றொரு திரைப்படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top