அதுக்கப்புறம் புடவை கட்டுறதையே வெறுத்துட்டேன்.. படக்குழுவால் கடுப்பான நடிகை சுலோக்ஷனா!..

சினிமாவில் பல வருடங்களாக நடிகையாக இருந்து 400க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுலோக்ஷனா. 1980 களிலேயே இவர் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். அப்போது அவர் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார்.
சுலோக்ஷனா நடித்த திரைப்படங்களில் தூரல் நின்னு போச்சு திரைப்படம் மிகவும் பிரபலமான திரைப்படமாகும். அதன் பிறகு பல பட வாய்ப்புகளை பெற்றார். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவிற்கு வருவதற்கு சுலோக்ஷனா மிகவும் கஷ்டப்பட்டார்.

1980 காலக்கட்டங்களில் அவ்வளவு எளிதாக யாரும் சினிமாவிற்குள் வந்துவிட முடியாது. இப்போது பெரும் நடிகர்களாக அறியப்படுபவர்கள் கூட அப்போது வாய்ப்புகளுக்காக அழைந்து கொண்டிருந்தனர். ஆனால் சுலோக்ஷனாவை பொறுத்தவரை அவருக்கு ஏற்கனவே வாய்ப்பு கிடைத்துவிட்டது.
சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டார். ஆனால் அதன் பிறகு கதாநாயகி ஆவது என்பது அவருக்கு பெரும் கடினமான காரியமாக மாறிவிட்டது. ஏனெனில் அவர் வாய்ப்பு கேட்கும் பல இடங்களிலும் பார்க்க சின்ன பொண்ணா இருக்கீயேம்மா என கூறி வெளியில் அனுப்பியுள்ளனர்.
புடவையை வெறுத்த நடிகை:
இந்த நிலையில் சுலோக்ஷனா வீட்டில் அவரை பெரிய பெண் போல் காட்டுவதற்காக அவருக்கு புடவை கட்டிவிட துவங்கினர். புடவையில் பார்க்கும்போது அவர் சற்று பெரிய பெண்ணாக தெரிவதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தனர். ஆனால் அப்போதும் படக்குழுவினர் ஏற்றுக்கொள்வதாக தெரிவதில்லை.

இந்த நிலையில் தூரல் நின்னு போச்சு படத்தில் ஒரு வழியாக கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. அதில் புடவையால் தடுக்கி கீழே விழுவது போல காட்சி வரும். அந்த காட்சி குறித்து சுலோக்ஷனா கூறும்போது அந்த காட்சியில் நிஜமாகவே தடுக்கி விழுந்தேன் என கூறியுள்ளார்.
மேலும் இந்த அனுபவங்களுக்கு பிறகு புடவை கட்டுவதையே நான் வெறுத்துவிட்டேன் என கூறியுள்ளார் சுலோக்ஷனா.
இதையும் படிங்க: இயக்குனர் செய்த காரியத்தால் ஆயிரம் பேருக்கு முன் அவமானப்பட்ட விஜயகாந்த்…